காலை வாரிய இளைஞர் காங்கிரசாரை திட்டி தீர்த்த கார்த்திக் சிதம்பரம்!
சிவகங்கை: தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரம் நிறுத்திய நபருக்கு ஓட்டு போடாமல், தோல்வியை அளித்த இளைஞர் காங்கிரசாரை கார்த்திக் சிதம்பரம் திட்டி தீர்த்துவிட்டாராம்.
தமிழக இளைஞர் காங்கிரஸ் மாநில நிர்வாகிகள் தேர்வு சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிட்டவர்களில் யுவராஜ் 6,557 வாக்குகள் பெற்று வெற்றி தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அடுத்தப்படியாக 3,657 வாக்குகள் பெற்ற விஜய் இளஞ்செழியன் துணை தலைவராகவும், 2,119 வாக்குகள் பெற்ற நாசே ஆர்.ராஜேஷ் மாநில பொது செயலாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.
தமிழக இளைஞர் கங்கிரஸ் தலைவராக மீண்டும் வெற்றி பெற்ற யுவராஜ், மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் ஆதரவாளர் ஆவார். இதில் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பத்தின் மகன் கார்த்திக் சிதம்பரம் சார்பில் நிறுத்தப்பட்டவர் விஜய் இளஞ்செழியன்.
கார்த்திக் சிதம்பரத்தின் சொந்த தொகுதி உள்ள சிவகங்கை மாவட்டத்தில் 836 பேர் வாக்களிக்க தகுதி பெற்று இருந்தார்களாம். ஆனால் இதில் 766 பேர் தான் வாக்களித்து உள்ளனர். அதிலும் யுவராஜூக்கு 355 வாக்குகள் கிடைத்துள்ளது.
ஆனால் விஜய் இளஞ்செழியனுக்கு அவர்களில் வெறும் 166 வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளதாம். இதை அறிந்து மனவேதனை அடைந்த கார்த்திக் சிதம்பரம், சம்பந்தப்பட்ட இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளை அழைத்து திட்டி தீர்த்துவிட்டாராம். வெளியே வந்தவர்கள் எங்க கடமையை தானே செய்தோம். அரசியலில் இது எல்லாம் சகஜமப்பா என்று சட்டை காலாரை தூக்கிவிட்டு கொண்டார்களாம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications