கோடி, கோடியாய் சம்பாதிக்கும் உலகின் டாப் 10 மாடல்கள்!
உலகிலேயே அதிகம் சம்பாதிக்கும் மாடல்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது. அழகும் இளமையும் கொண்ட இந்த தேவதைகள் ஒரு ஆண்டிற்கு பல மில்லியன் டாலர்களை சம்பாதிக்கின்றனர். முதல் 10 இடங்களைப் பிடித்துள்ள மாடல்கள் இதோ..

மவுசு குறையாத கிஸ்ஸெலே பின்ட்சென்
பிரேசில் நாட்டைச் சேர்ந்த இந்த அழகியின் கடந்த ஆண்டு மாடல் வருமானம் 45 மில்லியன் டாலர்கள். 31 வயதான இந்த அழகிக்கு ஹாலிவுட் நடிகர் லியர்னார்டோ டிகாப்ரியோ உடன் காதல் பயங்கர ஹாட்டாக இருந்தது. பின்னர் கால்பந்து வீரர் டாம் பிராடியை திருமணம் செய்து குழந்தை பெற்றுக்கொண்ட பின்னரும் மாடல் அம்மணிக்கு மவுசு குறையவில்லை.

தங்க உருவச்சிலை அழகி கேட் மோஸ்
ஒல்லி இடுப்போடு ஒடிந்து விழுந்து விடுவதைப்போல இருந்தாலும் கடந்த ஆண்டு கேட் மோஸ் சம்பாதித்த தொகை 9.2 மில்லியன் டாலர்கள். கடந்த 2008 ம் ஆண்டு பிரிட்டிஸ் மியூசியத்தில் இந்த ஒல்லிக்குச்சி உடம்புக்காரியின் 100 சதவிகிதம் தங்கத்தால் செய்யப்பட்ட உருவச்சிலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. போதைப்பழக்கத்திற்கு அடிமையாகி பல முக்கிய ஒப்பந்தகளை இழந்தார் என்றாலும் சம்பாத்தியத்திற்கு குறைவில்லை.

பூங்கா நாயகி நடாலியா வோடியானோவா
ரஷ்யாவில் பிறந்த இந்த அழகி வசிப்பது இங்கிலாந்தில்தான். இவர் கடந்த ஆண்டில் சம்பாதித்த தொகை 8.6 மில்லியன் டாலர்கள். பிறந்த நாட்டின் அதிகம் பற்றுக்கொண்ட இந்த அழகி தன்னுடைய சொந்த காசில் ரஷ்யாவில் நிறைய பூங்காக்களை கட்டியிருக்கிறார். 2014 ம் ஆண்டு நடக்கப்போகும் குளிர்கால விளையாட்டுப்போட்டிகளுக்கான தூதுவராக இவரை ரஷ்ய அரசு நியமித்திருக்கிறது.

ஹாட் நியூஸ் ஆட்ரியானா லீமா
செக்ஸ் பற்றி பேசி ஹாட் நியூசில் இடம் பிடித்த இந்த மாடல் கடந்த வருடத்தில் சம்பாதித்த தொகை 7.3 மில்லியன் டாலர்கள். தோழிக்கு துணையாக சூட்டிங் சென்றவர் தானும் மாடலானார். திருமணத்திற்கு பிறகான செக்ஸ்தான் முழுமையானது என்று கூறிய இந்த அழகி செர்பிய விளையாட்டு வீரரை கரம்பிடித்துள்ளார்.

மெழுகுச்சிலை அழகி டாட்சன் குரோஸ்
சமூக சேவை மனப்பான்மை கொண்ட இந்த அழகி டான்ஸ் 4 லைஃப் என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இதன் மூலம் எச்.ஐ.வி விழிப்புணர்வு பிரச்சாரங்களை செய்து வருகிறார். இவரது கடந்த ஆண்டு மாடலிங் வருமானம் 6.9 மில்லியன் டாலர்கள். டச்சு மொழியில் வெளியான முதல் 3டி படத்தில் இவர்தான் ஹீரோயின். நெதர்லாந்தை தாயகமாக கொண்ட டாட்சனுக்கு ஆம்ஸ்டர்டாம் டுசாட் அருங்காட்சியகத்தில் மெழுகுச்சிலை வைக்கப்பட்டுள்ளது.

அலர்ஜி அலெக்சான்ட்ரா அம்ப்ரோசியா
பிளாஸ்டிக் சர்ஜரி என்றாலே இந்த அழகிக்கு அலர்ஜியாம். இதற்குக் காரணம் சிறுவயதில் தன்னுடைய பெரிய காதுகளை பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டதில் அது மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்திவிட்டதாம். இதன் காரணமாகவே இப்பொழுது பிளாஸ்டிக் சர்ஜரி பக்கம் எட்டிக்கூட பார்ப்பதில்லை. இந்த மாடல் அழகியின் கடந்த ஆண்டு வருமானம் 6.6 மில்லியன் டாலர்கள். இரண்டு குழந்தைகளுக்கு தயான பின்னரும் மாடல் வருமானத்தில் டாப் 10க்குள் இருக்கிறார்.

தேங்காய் எண்ணெய் மிரண்டா கெர்
கிரீன் டீயுடன் தேங்காய் கலந்து குடித்து தன் அழகினை பாதுகாத்து வருகிறார் இந்த ஆஸ்திரேலியா அழகி. இவரது கடந்த ஆண்டு வருமானம் 4 மில்லியன் டாலர்கள். பள்ளிப் படிப்பை முடிக்கும் முன்பே ‘டாலி' இதழின் சிறந்த மாடல் பட்டத்தை வென்றவர் என்ற பெருமை இவருக்கு உண்டு.

பல் அழகி லாரா ஸ்டோன்
மெர்சிடிஸ் பென்ஸ் கம்பெனிக்கான மாடல்களில் முக்கியமானவர். இவர் கடந்த ஆண்டு சம்பாதித்த தொகை 3.8 மில்லியன் டாலர்கள். 12 வயதிலேயே மாடலிங் உலகில் நுழைந்த லாராவின் பல் வரிசை வித்தியாசமாக இருக்கும். கடந்த 2009 ம் ஆண்டு போதைப்பழக்கத்தில் இருந்து மீள்வதற்காக சிகிச்சை பெற்றிருக்கிறார்.

கலக்கல் கரோலின் மர்ஃபி
வெள்ளை உடையில் தேவதையாகத் தெரியும் இந்த அழகி 15 வது வயதில் மாடல் உலகிற்குள் நுழைந்தார். இவரின் கடந்த ஆண்டு வருமானம் 3.5 மில்லியன் டாலர்கள்.

அதிர்ஷ்ட தேவதை கேண்டிஸ் ஸ்வேன் போய்ல்
தென் அப்ரிக்காவில் பிறந்து, மார்க்கெட்டில் சுற்றித் திரிந்த போது அதிர்ஷ்டதேவதை இவரை உரசிப் பார்த்தது. அதிகம் சம்பாதிக்கும் இளவயது மாடல். கடந்த ஆண்டு இவரின் வருமானம் 3.1 மில்லியன் டாலர்கள்.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications