மாறி, மாறி... சே, தப்பு பண்ணிட்டோம்.. அன்புமணி வேதனை!

இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில்,
பாட்டாளி மக்கள் கட்சி கடந்த 15 ஆண்டுகளாக திராவிட கட்சிகளுடன் மாறி, மாறி கூட்டணி அமைத்து வந்துள்ளது. இதனால், பாமக மீதான நம்பகத்தன்மை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. திராவிட கட்சிகளுடன் கூட்டணி அமைத்தது தவறு என்பதை உணர்ந்து கொண்டுள்ளோம். மக்களிடம் கட்சி இழந்த நம்பிக்கையை திரும்ப பெறுவதற்கு ஒரு முன்னுரை அமைத்துள்ளோம்.
வருகிற பாராளுமன்ற தேர்தலில் நாங்கள் தனித்து போட்டியிட்டு, மக்களிடம் நம்பிக்கையை பெறுவோம். இது 2016-ல் நடக்கும் சட்டசபை தேர்தலில் ஒரு கூட்டணிக்கு தலைமை தாங்கி செல்ல உதவிகரமாக இருக்கும். கட்சி விரும்பினால் பாராளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடுவேன்.
கடந்த 2001 சட்டசபை தேர்தலில், அதிமுக உடன் கூட்டணி சேர்ந்திருந்தோம். ஆனால், ராஜ்ய சபா தேர்தலுக்கு முன்பாகவே, அந்த கூட்டணியில் இருந்து நாங்கள் வெளியேறி விட்டோம். சுயமரியாதையை விட்டுக் கொடுத்து, அந்த கூட்டணியில் நாங்கள் நீடித்திருந்தால், ஒரு ராஜ்ய சபா எம்.பி., பதவியை பெற்றிருக்க முடியும். நாங்கள் அவ்வாறு செய்யவில்லை.
2011 சட்ட சபை தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்து, தொகுதி பங்கீடு செய்து கொண்டோம். அப்போது கூட எங்களுக்கு ராஜ்ய சபா சீட் தர திமுக தலைவர் மறுத்து விட்டார். ராஜ்ய சபா சீட்டுக்காக அந்த கட்சியில் கூட்டணி அமைத்தோம் என்றால், தேர்தல் முடிந்த கையோடு திமுக கூட்டணியை விட்டு நாங்கள் வெளியேறி இருக்க மாட்டோம். இந்த இரண்டு திராவிட கட்சிகளும் தமிழகத்தின் சமூக பொருளாதார கட்டமைப்பை சீரழித்து விட்டன.
இந்த கட்சிகள் மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஒரு அரசியல் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. இந்த வெற்றிடத்தை பாட்டாளி மக்கள் கட்சி நிரப்பும். 2016 சட்டசபை தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி முக்கிய இடம் வகிக்கும். பாமக தலைமையில் ஒரு கூட்டணி அமையும் என்றார் அன்புமணி.
-
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம்












Click it and Unblock the Notifications