நெல்லை- தாதர் வாராந்திர சிறப்பு ரயில்-நாளை முதல் துவக்கம்

நெல்லையில் இருந்து மும்பைக்கு செல்ல பயணிகள் கூட்டம் அலைமோதி வரும் நிலையில் நாளை முதல் அடுத்தடுத்து வரும் 3 புதன்கிழமைகளில் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
சிறப்பு ரயில் எண்.06746 நாளை, வரும் 24 மற்றும் 31ம் தேதிகளில் நெல்லையில் இருந்து காலை 7.10க்கு புறப்பட்டு செல்லும், வியாழக்கிழமை அன்று பிற்பகல் 4.25 மணிக்கு தாதரை சென்றடையும்.
மறுமார்க்கத்தில் சிறப்பு ரயில் எண்.06745 வெள்ளிக்கிழமைகளில் வரும் 26 மற்றும் நவம்பர் 2ம் தேதி இரவு 8.40 மணி்க்கு தாதரில் இருந்து புறப்பட்டு ஞாயிற்றுக்கிழமை காலை 9.45 மணிக்கு நெல்லையை வந்தடையும்.
இந்த ரயிலில் ஒரு ஏசி பெட்டி, 6 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி கொண்ட பெட்டி, 6 பொது பெட்டிகள், 2 லக்கேஜ் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. இந்த ரயில் நெல்லையில் இருந்து கோவில்பட்டி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கரூர், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு, கோழிக்கோடு, மங்களூர், உடுப்பி, ரத்னகிரி, பனுவேல், தானே வழியாக தாதரை சென்றடையும்.
தென்னக ரயில்வே காலதாமதாமான அறிவிப்பு காரணமாக இந்த சிறப்பு ரயில் முன்பதிவு விபரங்கள் நேற்று மாலை வரை முன்பதிவு பட்டியலில் இடம் பெறவில்லை. இன்று முழுவதும் இந்த ரயிலுக்கான முன்பதிவு நடைபெறுகிறது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications