சிங்களவர்களை 'உளவாளிகளாக' சேர்த்துக் கொள்ள 'ரா' நடவடிக்கை
Subscribe to Oneindia Tamil

இந்திய ஊடகங்கள் சிலவற்றில், ரா அமைப்பில் சிங்கள மொழி தெரிந்தவர்களையும் இணைத்து கொள்வதற்கு முடிவெடுக்கப்பட்டிருப்பதாகவும் இதனடிப்படையில் ஏராளமான சிங்களவர்களை சேர்த்துக் கொள்ள இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனை அனைத்து இலங்கை ஊடகங்களும் வரவேற்றுக் கொண்டாடி இருக்கின்றன.
இதேபோல் சிங்கள மொழிக்கு அடுத்தப்படியாக ஆப்கானிஸ்தானின் பாஸ்தோ, ஈரானின் தாரி, சீனாவின் மண்டரின், மியன்மாரின் மியன்மாரி ஆகிய மொழிகளை அறிந்தவர்களையும் பணியில் சேர்க்க ரோ அமைப்பு திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்தியாவின் ரகசியங்களை எப்ப எப்ப தெரியலாம் என்று சிங்களவன் காத்திருக்க... வாசலை திறந்துவிடுகிறதா ரா அமைப்பு என்பது அரசியல் பார்வையாளர்களின் ஆதங்கம்.












Click it and Unblock the Notifications