'ஆடர் ஆப் ஆஸ்திரேலியா'வின் கவுரவ உறுப்பினர் பதவி பெறுகிறார் சச்சின்

ஆஸ்திரேலிய நாட்டின் கவுரவ பதவி ஒன்று, இந்திய கிரிக்கெட் வீரர் சச்சினை தேடி வந்துள்ளது. இந்திய மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சினின் ஆட்டத்தை பாராட்டி, 'ஆடர் ஆப் ஆஸ்திரேலியா'வின் கவுரவ உறுப்பினர் பதவிக்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
பொதுவாக இந்த பதவி ஆஸ்திரேலிய குடிமகன்களுக்கு மட்டுமே வழங்கப்படுவது வழக்கம். ஆனால் அரிதாக சூழ்நிலைகளில் வெளிநாட்டு குடிமகன்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் மேற்கிந்திய தீவுகள் கேப்டன் பிரையன் லாரா, கிளைவ் லாய்டு ஆகியோர் இந்த கவுரவ பதவியை பெற்றுள்ளனர்.
இவர்களின் வரிசையில் தற்போது சச்சினும் சேர்ந்துள்ளார். தற்போது தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் லீக் டுவென்டி20 தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆடிவரும் சச்சின், இந்தியா திரும்பிய பிறகு இந்த பதவியை ஏற்று கொள்வார் என்று தெரிகிறது.
இது குறித்து ஆஸ்திரேலிய பிரதமர் ஜூலியன் கில்லார்ட் கூறியதாவது,
இந்தியா, ஆஸ்திரேலியா நாடுகளுக்கு இடையிலான உறவிற்கு கிரிக்கெட் முக்கிய பாலமாக அமைந்துள்ளது. இரு நாடுகளிலும் கிரிக்கெட் ரசிகர்கள் அதிகம். சச்சினுக்கு கவுரவ பதவி கொடுப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த பதவி வெளிநாட்டினருக்கு அளிப்பது மிகவும் அபூர்வம். ஆனால் இந்த சிறப்பான பதவியை, ஒரு சிறப்பான கிரிக்கெட் வீரரான சச்சினுக்கு அளிப்பது கவுரவமானது என்றார்.


Click it and Unblock the Notifications
