குழந்தைகள் கண் முன்னே தூக்கில் தொங்கிய தம்பதி: தாய் பலி- தந்தை 'சீரியஸ்'
அரக்கோணம்: அரக்கோணத்தில் குடும்ப தகராறு காரணமான குழந்தைகளின் கண் முன்னே கணவனும், மனைவியும் தற்கொலை செய்து கொள்ள தூக்கில் தொங்கினர். இதில் மனைவி இறந்தார். கணவன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அரக்கோணம் நாகாலம்மன் நகரை சேர்ந்தவர் ராஜேஷ் குமார்(32). கார் ஓட்டுநர். இவரது மனைவி ஷர்மியா(28). கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு, பாலாஜி அரவிந்த்(4) என்ற மகனும், 10 மாத பெண் குழந்தையும் உள்ளனர்.
கடந்த 14ம் தேதி கணவன்-மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் அதிருப்தியடைந்த ஷர்மிளா, வீட்டில் இருந்த மின்விசிறியில் தூக்கு போட்டு கொண்டார். அதை கண்ட கணவன் ராஜேஷ்குமார், தானும் தற்கொலை செய்து கொள்ள விரும்பி, தூக்கில் தொங்கினார்.
பெற்றோர் தூக்கில் தொங்குவதை கண்ட குழந்தைகள் செய்வது அறியாமல் அழுதனர். குழந்தைகளின் சத்தம் கேட்டு, அப்பகுதியினர் வந்து பார்த்த போது கணவனும், மனைவியும் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக தூக்கில் தொங்கிய இருவரையும் மீட்டு, அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ஷர்மிளா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். ஆபத்தான நிலையில் இருந்த ராஜேஷ்குமார், மேல்சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து அரக்கோணம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்னம்பலம் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications