சீனா கட்டிக் கொடுத்த இலங்கை விமான நிலையத்தில் சோதனை ஓட்டம் நடத்துகிறது பாக். விமானம்
Subscribe to Oneindia Tamil
அம்பந்தோட்டை: இலங்கையின் அம்பந்தோட்டை மத்தாலவில் சீனா கட்டிக்கொடுத்த சர்வதேச விமான நிலையத்தில் பாகிஸ்தான் நாட்டு விமானம் முதல் முறையாக சோதனை ஓட்டமாக தரையிறங்கியிருக்கிறது.
அம்பந்தோட்டை மத்தால விமான நிலையத்தை சீனா கட்டிக் கொடுத்திருக்கிறது. இதன் கட்டுமானப் பணிகள் முடிவடைந்த நிலையில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. சீனாவினால் கட்டிக் கொடுக்கப்பட்ட இலங்கையின் விமான நிலையத்தில் தரை இறக்கபப்ட்ட முதல் சோதனை ஓட்ட விமானம் பாகிஸ்தானுடையது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு வாரத்துக்கு பாகிஸ்தானின் விமானம் இலங்கையில் சோதனையில் முறையில் தரையிறங்க பரிசோதனைகளை மேற்கொள்ளும். இன்னும் எஞ்சிய கட்டுமானப் பணிகளும் முடிவடைந்து வரும் ஜனவரியில் முழுமையான விமானப் போக்குவரத்து செயல்படுத்தப்பட இருக்கிறது.












Click it and Unblock the Notifications