திமுக கலை இலக்கிய பேரவையை வலுப்படுத்த திட்டம்-சுற்றுப்பயணத்திற்கு தயாராகிறார் கனிமொழி?
சென்னை: தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு திமுக இளைஞரணியை மு.க.ஸ்டாலின் வலுப்படுத்தி வருகிறார். அதேபோல திமுகவின் கலை இலக்கிய பேரவையை கனிமொழி வலுப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் உள்ள அனைத்து ஊர்களுக்கும் சென்று திமுக இளைஞரணிக்கு புதிய மாவட்ட அமைப்பாளர் மற்றும் பல்வேறு பொறுப்புகளுக்கு நிர்வாகிகளை அதன் இளைஞரணி அமைப்பாளர் மு.க.ஸ்டாலின் தேர்வு செய்தார்.
இதன்மூலம் திமுக தலைவர்களின் ஆதிக்கம் குறைந்த அணியாக திமுகவின் இளைஞரணி மாறியது. இதனால் திமுக இளைஞரணியில் புதிய முகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இதற்கு தொண்டர்கள் இடையே பெரும் வரவேற்பு கிடைத்தது.
இந்த நிலையில் மு.க.ஸ்டாலினை போல, திமுகவின் கலை இலக்கியப் பேரவையை கனிமொழி வலுப்படுத்த போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையி்ல் நடைபெற்ற திமுக செயற்குழு கூட்டத்தின் போது, சில மாவட்ட செயலாளர்களுடன் கனிமொழி ஆலோசித்துள்ளராம்.
இதன்முடிவில், இது போன்ற நடவடிக்கையின் மூலம் கட்சியில் தனக்கு என்று ஒரு ஆதரவாளர்கள் வட்டத்தை உருவாக்க முடியும் என்றும், இதுவே கட்சியில் மீண்டும் புதுமுகங்கள் வர வாய்ப்பை உருவாக்கும் என்றும் கருதுவதாக கூறப்படுகிறது. இதன்மூலம் கட்சிக்கு லாபம் ஏற்படும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.
இதற்காக கனிமொழி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள தயாராகி வருவதாக திமுக தரப்பு தகவல்கள் கூறுகின்றன. திமுக தலைவரும், அவரது தந்தையுமான கருணாநிதி 'கிரீன் சிக்கனல்' கொடுத்துவிட்டால் கனிமொழியின் சுற்றுப்பயண விவரம் விரைவில் வெளிவரும் என்று தெரிகிறது.
-
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா?












Click it and Unblock the Notifications