சச்சினுக்கு ஏன் விருது கொடுக்கணும்?: ஆஸ்திரேலியாவில் எதிர்ப்பு

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கில்லார்ட், விளையாட்டுத்துறையில் சாதனை படைத்த இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு ஆஸ்திரேலியாவின் "ஆர்டர் ஆப் ஆஸ்திரேலியா" விருது வழங்கப்படும் என்று செவ்வாய்கிழமை அறிவித்தார்.
பொதுவாக இந்த பதவி ஆஸ்திரேலிய குடிமகன்களுக்கு மட்டுமே வழங்கப்படுவது வழக்கம். ஆனால் அரிதாக சூழ்நிலைகளில் வெளிநாட்டு குடிமகன்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் மேற்கிந்திய தீவுகள் கேப்டன் பிரையன் லாரா, கிளைவ் லாய்டு ஆகியோர் இந்த கவுரவ பதவியை பெற்றுள்ளனர்.
இருப்பினும் பிரதமர் ஜூலியா கில்லார்டின் முடிவிற்கு ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த சுயேட்சை எம்.பி., ராப் ஒகாஸூட், எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து கருத்து கூறியுள்ள அவர், கிரிக்கெட்டை நான் நேசிக்கிறேன். இந்திய கிரிக்கெட் வீரர் சச்சினையும் நேசிக்கிறேன். அதற்காக அவருக்கு ஆஸ்திரேலியாவின் கவுரமிக்க விருதினை கொடுப்பது சரியல்ல என்று கூறினார். ஆஸ்திரேலியாவில் பிறந்தவருக்கு மட்டுமே அந்த விருது வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இவரைப்போன்று பல்வேறு விளையாட்டுத்துறை அமைப்புகளும், அரசியல் பிரமுகர்களும் பிரதமர் கில்லார்டின் முடிவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications