காமராஜர் பல்கலை கழக பட்டமளிப்பு விழா: ஆளுநர் ரோசைய்யா நாளை மதுரை வருகை!

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரை காமராஜர் பல்கலை கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள நாளை தமிழக ஆளுநர் ரோசைய்யா மதுரை வருகிறார்.

இது குறித்து மதுரை காமராஜர் பல்கலை கழக துணைவேந்தர் கல்யாணி மதிவாணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் 46வது பட்டமளிப்பு விழா நாளை மதியம் 12.45 மணிக்கு பல்கலை கழகத்தில் உள்ள டாக்டர் மு.வ.அரங்கில் நடைபெற உள்ளது. இந்த விழாவில் பல்கலை கழக வேந்தரும், தமிழக ஆளுநருமான ரோசைய்யா கலந்து கொண்டு பட்டங்களை வழங்க உள்ளார்.

136 பேருக்கு பி.எச்.டி. ஆராய்ச்சி பட்டம் மற்றும் 56 ஆயிரத்து 577 மாணவ-மாணவியருக்கு பட்டம் வழங்கப்பட உள்ளது. கடந்த ஆண்டை காட்டிலும், இந்த ஆண்டு கூடுதலாக 15 ஆயிரம் பேருக்கு பட்டம் வழங்கப்படுகிறது.

இந்த விழாவில் உயர்கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன், பெங்களூர் இந்திய விண்வெளி நிறுவன செயற்கை கோள் மைய திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை ஆகியோர் சிறப்புரையற்ற உள்ளனர் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+