22 மணி நேர மின்வெட்டு - தீப்பந்தம் ஏந்திப் போராட்டம்: சீமான்

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் பேருந்து நிலையம் அருகில் நடந்த பொதுக்கூட்டத்தில் சீமான் பேசியது:
காங்கிரஸ், பா.ஜ.க இரு கட்சிகளும் தேசிய கட்சிகள். ஆனால் மாநில கட்சிகள் போல செயல்பட்டு நமக்கு தண்ணீர் கொடுக்க மறுத்து வருகிறது. ஆனால் தமிழகத்தில் உள்ள தி.மு.க, அ.தி.மு.க போன்ற மாநில கட்சிகள் தேசிய கட்சிகள் போல செயல்படுகிறது.
மத்திய அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்க கூடாது என்று அவசர கடிதம் எழுதுகிறார். ஆனால் தமிழகத்தில் இருந்து டெல்லிக்கு போன ப.சிதம்பரம், அழகிரி போன்றவர்கள் தண்ணீர் கொடு என்று கடிதம் கொடுக்கவில்லை. கிருஷ்ணாவிற்கு உள்ள இன உணர்வு தமிழர்களுக்கு இல்லை.
தமிழகத்தில் இலவசம் என்ற சொல்லை தமிழன் அகராதியில் இருந்து அகற்றுவோம். தமிழகத்தில் 22 மணி நேரம் மின்சாரமே இல்லை. எப்ப பார்த்தாலும் மின்சாரம் இல்லை. இந்த நிலையை மாற்ற தீப்பந்தம் ஏந்தி போராட்டம் நடத்துவோம்.
கேரளாவில் அணு உலை இல்லை. ஆனால் அங்கு தடையில்லா மின்சாரம் கிடைக்கிறது. ஆனால் தமிழகத்தில் மட்டும் ஏன் கிடைக்கவில்லை. காரணம் நமது மின் உற்பத்தியில் 75 சதவீதம் யூனிட் ரூ 3 க்கு பன்னாட்டு முதலாளிகளுக்கு தடையில்லா மின்சாரம் கொடுக்கிறது.
ஆனால் சொந்த மக்கள் ரூ 5 க்கு ஒரு யூனிட் மின்சாரம். அதுவும் 22 மணி நேரம் நமக்கு மின்சாரம் இல்லை.
பன்னாட்டு கம்பெனிகளுக்கு தாரைவார்த்து கொடுத்துவிட்டு நம்மை இருட்டில் போட்டுவிட்டது. மின் தடையால் பினவறைகளில் பிணங்கள் நாறுகின்றன. மின் மயானத்தில் பாதி எரிந்த நிலையில் பிணங்கள் உள்ளன," என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications