ஜெகன்மோகன் ரெட்டி தங்கையின் பாதயாத்திரை... ரோஜாவின் 'ஜைங் ஜக்!'
ஹைதராபாத்: ஜெகன் மோகன் ரெட்டியின் தங்கை ஷர்மிளாவின் பாதயாத்திரை ஆந்திராவில் சரித்திரம் படைக்கும் என்று கூறியுள்ளார் நடிகை ரோஜா.
ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கை ஷர்மிளா பாத யாத்திரை மேற்கொண்டுள்ளார்.

3 ஆயிரம் கிலோ மீட்டர் நடந்து செல்ல அவர் திட்டமிட்டுள்ளார். முதல்நாள் பாதயாத்திரையில் லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
ஜெகன் மோகன் ரெட்டி தாயாரும், எம்.எல்.ஏ.வுமான விஜய லட்சுமி, மனைவி பாரதி, நடிகை ரோஜா உள்ளிட்ட ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், தலைவர்கள் பங்கேற்றனர்.
ஷர்மிளா பாதயாத்திரை பற்றி நடிகை ரோஜா கூறுகையில், "ஆளும் கட்சியையும், எதிர்க்கட்சியையும் எதிர்த்து ஒரு பெண் பாதயாத்திரை மேற்கொள்வது இந்திய அரசியல் சரித்திரத்திலேயே இடம் பெறாத ஒன்று. மகாத்மா காந்தி யாத்திரை சென்றபோது அவருடன் பெண்கள் கலந்து கொண்டனர். அதற்கு பிறகு ஒரு பெண் யாத்திரை செல்வது இதுதான் முதல் சம்பவம் ஆகும்.
ஷர்மிளா பாதயாத்திரை சரித்திரம் படைக்கும். மக்களின் துயரை தீர்க்கும். மக்களின் கண்ணீரை துடைக்க வேண்டிய காங்கிரஸ் அரசு கையாலாகாத அரசாக உள்ளது. 9 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்தும் சந்திரபாபு நாயுடு அப்போது மக்களுக்கு எதுவும் செய்யாமல் இப்போது மக்களை சந்திக்க வருகிறார்.
பதவி ஆசையில் அவர் யாத்திரை மேற்கொண்டு உள்ளார். ஆனால் ஷர்மிளா யாத்திரை மக்களுக்காக நடக்கிறது. ஜெகன் விடுதலையாகி வந்தால் யாத்திரையை அவர் தொடங்குவார்," என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications