நித்யானந்தா மீது கிரிமினல் வழக்குகள் பதிவு செய்ய நெல்லை கண்ணன் கோரிக்கை!
நெல்லை: மதுரை ஆதீனத்தில் ஏற்பட்ட பல்வேறு சர்ச்சைகளுக்கும், பிரச்சனைகளுக்கும் நித்தியானந்தா காரணமாக இருந்ததால், அவர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று நெல்லை கண்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து மதுரை ஆதீன மீட்பு போராட்ட குழு தலைவர் நெல்லை கண்ணன் கூறியதாவது,
நித்யானந்தா, மதுரை மடத்திற்குள் வரும் போதே பல விபரீத நிகழ்வுகள் நடக்கும் என்பதை முன்கூட்டியே மக்களிடம் எடுத்துச் சொன்னோம். மதுரை ஆதீனத்தின் உயிருக்கு நித்யானந்தாவால் ஆபத்து உள்ளது என்பதையும் ஆரம்பத்தில் இருந்தே நாங்கள் கூறி வந்தோம்.
தற்போது நீதிமன்றத்தின் வழக்குகளின் முடிவுகளும் நித்யானந்தாவுக்கு எதிராகவே உள்ளது. இந்த சூழ்நிலையில் இளைய ஆதீனம் பொறுப்பில் இருந்து நித்தியான்தாவை நீக்கும் முடிவை மதுரை ஆதீனம் அருணகிரி நாதர் அறிவித்துள்ளார். இதனை ஆதின மீட்பு குழு முழு மனதோடு வரவேற்கிறது.
இந்த நீக்கம் தமிழக அரசின் நடவடிக்கையால் தான் நடந்துள்ளது. இதற்காக முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஆயிரம் நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். நித்யானந்தாவிடம் பல இளைஞர்கள் சிக்கி தவிக்கின்றனர். அவர்களில் பலரும் நித்யானந்தாவின் போதை பழக்கத்திற்கு அடிமையாகி தங்கள் குடும்பங்களை மறந்து நித்யானந்தாவிடம் அடிமையாக உள்ளனர். அவர்களையும் தமிழக அரசு மீட்க வேண்டும்.
மேலும் மதுரை ஆதீனத்தின் பல்வேறு சர்ச்சைகளுக்கும், பிரச்சனைகளுக்கும் நித்தியானந்தா காராணமாக இருந்ததால், அவர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications