அப்பா மல்லையா கொரியாவில்.. 'கேர்ள்ஸ்' தேடி லண்டனில் மகன்.. பரிதவிப்பில் கிங்பிஷர் குடும்பங்கள்!
பெங்களூர்: கிங்பிஷர் ஊழியர்கள் பெரும் தவிப்பில் தகித்துக் கொண்டுள்ள நிலையில் அதன் உரிமையாளரான விஜய் மல்லையா தென் கொரியாவில் போய் உட்கார்ந்து கொண்டுள்ளார். மகன் சித்தார்த் மல்லையாவோ, 2013ம் வருட காலண்டருக்கு எந்த அழகியைப் போடுவது என்று லண்டனில் உட்கார்ந்து கொண்டு பிசியாக ;பெண்; பார்த்துக் கொண்டுள்ளார்.

ரத்தான கிங்பிஷர் லைசென்ஸ்
கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைவிதி கிட்டத்தட்ட இறுதிக் கட்டத்திற்கு வந்து விட்டது. அதன் லைசென்ஸை ரத்து செய்து விட்டது. இதனால் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் ஊழியர்கள் பெரும் தவிப்பிலும், அதிர்ச்சியிலும் மூழ்கியுள்ளனர்.

ரேஸ் பார்க்க ஓடிப் போன மல்லையா
நிலைமை இப்படி மோசமாக இருக்கும் நிலையில், தென் கொரியாவில் நடைபெறும் கார்ப் பந்தயத்தைப் பார்க்க ஓடி விட்டாராம் விஜய் மல்லையா. இருப்பினும் தற்போது அவர் எங்கே இருக்கிறார் என்பதே கிங்பிஷர் நிறுவனத்திற்குத் தெரியவில்லையாம்.

மகனுக்கு காலண்டர் கேர்ள்ஸ் கவலை!
அப்பா மல்லையா இப்படி இருக்க மகன் சித்தார்த்துக்கோ 2013ம் ஆண்டுக்கான காலண்டர் அட்டையில் எந்த அழகியைப் போடுவது என்ற கவலையாம். அவர் அழகான கேர்ள்ஸைத் தேடி, பிக்ஸ் செய்யும் பணியில் படு பிசியாக இருக்கிறாராம்.

நல்ல பொண்ணா பார்க்கிறேன்!
இதுகுறித்து டிவிட்டரில் அவர் போட்ட மெசேஜைப் பாருங்கள்...தோழர்களே, கிங்பிஷர் 2013 காலண்டர் அழகியைத் தேடும் பணியில் பிசியாக இருக்கிறேன். கண்டிப்பாக கண்டுபிடித்து விடுவேன்.

பப்பில் ஒரே கூட்டமாம்.. இது சித்தார்த்தின் இன்னொரு டிவிட்
அதேபோல அவர் வெளியிட்டுள்ள இன்னொரு டிவிட்டில் தான் லண்டனில் இருப்பதை சொல்லியுள்ளார். அதாவது அங்குள்ள பப்புக்குப் போனாராம், பப்பில் ஒரே கூட்டமாம், லண்டன் கிளைமேட் சூப்பரா இருக்காம், அங்கு இருப்பதே சொர்க்கமாக இருக்கிறதாம்.

நான் ஏன் லண்டனை விட்டு வரணும்...??
இப்படிப்பட்ட சூழலில் நான் ஏன் லண்டனை விட்டுக் கிளம்பனும் என்றும் சித்தார்த் கேட்டிருப்பதுதான் சோகத்தின் உச்சகட்டம்.

பரிதாபத்தில் கிங்பிஷர் ஊழியர்கள்
இப்படி அப்பாவும்,மகனும் ஆளுக்கு ஒரு நாட்டில் போய் உட்கார்ந்து கொண்டிருப்பதால், கிங்பிஷர் ஏர்லைன்ஸ் ஊழியர்கள் பெரும் சோகத்திலும், கோபத்திலும், வேதனையிலும் மூழ்கியுள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications