மழைகாலத்தில் ‘மின்சாரம்’ தாக்காமல் இருக்க என்ன செய்யனும்: ஈபி அட்வைஸ்
சென்னை: பருவமழை காலங்களில் மின்சாரம் தாக்காமல் இருக்க என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதை மின்சார வாரியம் வெளியிட்டிருக்கிறது.
மின்சார வாரியத்தின் அட்வைஸ்ட் டிப்ஸ் சில...
- மின் விபத்துகளை தவிர்க்க மின்சார ஒயரிங் வேலைகளை அரசு உரிமம் பெற்ற மின்ஒப்பந்தகாரர்கள் மூலம் செய்வதுடன், ஐ.எஸ்.ஐ. முத்திரை பெற்ற மின்சாதனங்கள் பயன்படுத்த வேண்டும்.
- மின்சார பிளக்குகளைப் பொருத்துவதற்கு முன்னரும், எடுப்பதற்கு முன்னரும் சுவிட்சை ஆப் செய்து விட வேண்டும்.
- குளிர்சாதனப்பெட்டி, கிரைண்டர் போன்ற வீட்டு உபயோக மின்சாதனங்களுக்கு மூன்று பின் சாக்கெட் உள்ள பிளக்குகளை பயன்படுத்துவது, ஈ.எல்.சி.பி. என்ற மின்கசிவு கருவியை மெயின் ஸ்விட்ச் போர்டில் பொருத்துவது, உடைந்த மின்சாதனங்களை உடனடியாக மாற்ற வேண்டும்.
- மேல்நிலை மின்கம்பிகளுக்கு அருகில் கேபிள் டி.வி. வயர்களை கட்டுவதை தவிர்க்க வேண்டும்.
- எர்த் பைப் போடுவது, 5 ஆண்டுக்கு ஒரு முறை வீட்டின் ஒயரிங்குகளை மாற்றுவது, மின்சார கம்பத்திற்கு போடப்பட்ட ஸ்டே கம்பி மீது துணி கயிறு கட்டுவது, கால்நடைகளை கட்டுவது, விளம்பர பலகை வைப்பது, மழைகாலங்களில் மின்சார கம்பங்களுக்கு அருகில் செல்வதை தவிர்க்க வேண்டும்.
- மின்கம்பிகள் அறுந்து விழுந்தால் உடனடியாக மின்வாரிய அலுவலகத்துக்கு தகவல் அளிக்க வேண்டும். அத்துடன் ஈரமான இடங்களில் சுவிட்சுகள் பொருத்துவது, மின் சர்க்யுட்டை அளவுக்கு மீறி பளு ஏற்றுவதை தவிர்க்க வேண்டும்.
- தீ விபத்து ஏற்பட்டால் தண்ணீர் விட்டு அணைக்காமல், தீயணைப்பான்களை பயன்படுத்துவது,
- இடி, மின்னலின் போது வெட்ட வெளி, குடிசை, மரத்தின் அடியிலோ, பஸ் நிறுத்த நிழற்குடையின் கீழே தஞ்சம் புகாமல், கான்கிரீட் கூரையிலான பெரிய கட்டிடம், வீடு போன்ற பெரிய கட்டிடங்களிலோ, உலோகத்தால் மூடப்பட்ட பஸ், கார், வேன் போன்ற வாகனங்களில் தஞ்சமடையுங்கள்.
- இடிமின்னலின் போது டிவி, மிக்ஸி, கிரைண்டர், கம்ப்ïட்டர் மற்றும் தொலைபேசிகள் பயன்படுத்துவதை தவிர்க்கலாம்.
இதுதான் நம்ம மின்சார வாரியம் கொடுத்திருக்கும் டிப்ஸ்!
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications