குஜராத் முதல்வர் மோடியுடன் இங்கிலாந்து தூதர் நேரில் சந்திப்பு

முக்கியத்துவம் என்ன?
குஜராத்தில் 2002-ம் ஆண்டு ஏற்பட்ட இனக்கலவரத்தில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். இங்கிலாந்து வாழ் குஜராத்திகளும் அடக்கம். இதையடுத்து குஜராத் மாநில அரசுடனான அனைத்து நேரடி உறவுகளையும் இங்கிலாந்து நிறுத்திவிட்டது. 2005-ம் ஆண்டு இங்கிலாந்து செல்ல விசா கோரி மோடி விண்ணப்பித்திருந்தார். ஆனால் இங்கிலாந்து நிராகரித்துவிட்டது. அதேபோல் மோடி இங்கிலாந்து வந்தால் அவரை கைது செய்யவும் கோரி சில அமைப்புகள் நீதிமன்றமும் சென்றன. இந்த நிலையில் அண்மையில் குஜராத் மாநிலத்தின் நிலைமைகளில் முன்னேற்றம் ஏற்படுவதால் அந்த மாநிலத்துடனான உறவுகள் புதுப்பிக்கப்படும் என்று இங்கிலாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் அறிவித்து இருந்தார்.
காந்திநகரில் சந்திப்பு
இதைத் தொடர்ந்து இன்று இந்தியாவுக்கான இங்கிலாந்து தூதர் ஜேம்ஸ் பெவன் குஜராத்தின் காந்தி நகரில் முதல்வர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பு சுமார் 50 நிமிட நேரம் நீடித்தது. அதன் பின்னர் குஜராத் மாநில ஆளுநர் கம்லா பெனிவாலையும் அவர் சந்தித்தார்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications