நடுங்க வைக்கும் ஊட்டி குளிருக்கு சென்னை பயணி பலி
ஊட்டி: சுற்றுலாவாக ஊட்டிக்கு வந்த சுற்றுலாப் பயணி ஒருவர் ஊட்டியில் நிலவி வரும் கடும் குளிரைத் தாங்க முடியாமல் பரிதாபமாக மரணமடைந்தார்.
சென்னை கொடுங்கையூர் காமராஜர் வீதியைச் சேர்ந்தவர் புருஷோத்தமன். 42 வயதான இவர் நண்பர் பிரசாந்துடன் 19ம் தேதி, ஊட்டிக்கு சுற்றுலா வந்தார். அன்று இரவு இருவரும் மது அருந்தியுள்ளனர். பின்னர் அறைக்குத் திரும்பினார். ஆனால் மீண்டும் வெளியே போயுள்ளார் புருஷோத்தமன். பின்னர் மீண்டும் அறைக்குத் திரும்பவில்லை.
இதையடுத்து பிரசாந்த் புருஷோத்தமனைத் தேடிப் போனார். அப்போது இன்னொரு ஹோட்டலின் வராண்டாவில் புருஷோத்தமன் படுத்துக் கிடந்ததைப் பார்த்தார். இதையடுத்து அருகில் போய்ப் பார்த்தபோது அவர் இறந்திருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து போலீஸுக்குத் தகவல் போனது. போலீஸார் விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். இதுகுறித்து போலீஸார் கூறுகையில், கடும் குளிர் காரணமாக புருஷோத்தமன் இறந்திருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். இருப்பினும் பிரேதப் பரிசோதனைக்குப் பின்னரே விவரம் தெரிய வரும் என்றனர்.
-
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications