வேலூர் அருகே மலைப்பாதையில் தடம்புரண்டது காவிரி எக்ஸ்பிரஸ்- பெரும் விபத்து தவிர்ப்பு
வேலூர்: கர்நாடகா மாநிலம் மைசூரிலிருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த காவிரி எக்ஸ்பிரஸ் ரயில் வேலூர் அருகே மலைப்பாதையில் தடம் புரண்டு நின்றது. பயணிகள் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.
மைசூரில் இருந்து நேற்று இரவு சென்னை நோக்கி காவிரி எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டிருந்தது. இன்று அதிகாலை 3 மணி அளவில் வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே கொத்தூர் மலைப் பாதையில் ரயில் வந்த போது பெரிய பாறாங்கல் ஒன்று உருண்டு தண்டவாளத்தில் விழுந்து கிடப்பதை ஓட்டுநர் பார்த்துவிட்டார். இதனால் ரயிலின் வேகத்தை சட்டென ஓட்டுநர் குறைத்த போது பாறை மீது ரயில் பெட்டி உரசியது. இதனால் என்ஜினிலிருந்து 5 பெட்டிகள் தடம் புரண்டன. தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்கிய பெட்டிகள் அப்படியே நின்றன. இதில் 20க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். ஓட்டுநர் வேகத்தைக் குறைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டிருக்கிறது.
விபத்து நடந்த இடம் அருகே 150 அடி பள்ளம் இருக்கிறது. தடம் புரண்ட ரயில் பெட்டிகள் கொஞ்சம் கீழே இறங்கி இருந்தால் பெரும் அசம்பாவிதம் நிகழ்ந்திருக்கும். மழை பெய்து கொண்டிருந்ததாலும் அதிகாலை நேரம் என்பதாலும் சுமார் 4 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு பயணிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
இந்த விபத்தால் பெங்களூர் எக்ஸ்பிரஸ், லால்பாக் மற்றும் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டன. மீட்புப் பணிகள் முடிவடைந்த நிலையில் 3 மணி நேரம் தாமதமாக ரயில்கள் புறப்பட்டுச் சென்றன.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications