என் 'சைஸ்' என்னவாயிருந்தா உனக்கென்ன?.. 'தில்' பெண்ணின் 'திரில்' போட்டோ!

என் சைஸ் என்னவாயிருந்தா உனக்கென்ன ... இதுதான் அந்தப் பெண் கேட்டிருக்கும் கேள்வி. இந்தப் புகைப்படத்தை வெளியிடும் நோக்கம் குறித்து விளக்கியுள்ள அவர், பெண்களின் உடல் அழகைத்தான் ஆண்கள் பார்க்கிறார்கள், கேலி செய்கிறார்கள். ஆனால் அவர்களது மனதைப் பார்ப்பது வெகு வெகு சிலரே. எனது உடல் அழகைப் பலரும் கேலி செய்துள்ளனர். ஆனால் அப்படிப்பட்டவர்களுக்குப் பதிலடி தரும் வகையில்தான் பாடம் கற்பிக்கும் நோக்கில்தான் இந்தப் படத்தை வெளியிட்டுள்ளேன் என்று கூறியுள்ளார்.
இவரது பெயர் ஸ்டெல்லா போன்ஷோப்ட். முதலில் இவர் ஒரு பிளாக்கில்தான் தனது படத்தைப் போட்டிருந்தார். அதில் பிரா மற்றும் பேண்டீஸில் அவர் காணப்பட்டார். இந்தப் படத்தைப் பார்த்த போட்டோகிராபர் பிரான்டன் ஸ்டேன்டன் என்பவர், தனது இணையதளத்தில் இதை எடுத்துப் பிரசுரித்தார்.
அதன் பின்னர் பேஸ்புக்கிலும் இந்தப் படத்தைப் போட்டார் பிரான்டன். அதன் பிறகுதான் ஏகப்பட்ட பிரபலமானது இவரது புகைப்படம்.இதுவரை நாலரை லட்சத்திற்கும் மேற்பட்ட லைக் இப்படத்துக்குக் கிடைத்துள்ளது. 20 ஆயிரம் முறை இது ஷேர் செய்யப்பட்டுள்ளது.
இந்தப் படம் எடுக்கப்பட்டதே சுவாரஸ்யமானது. மன்ஹாட்டன் பகுதியில் பிரான்டனை ஒருமுறை ஸ்டெல்லா சந்தித்தார். அப்போது தன்னை ஒரு புகைப்படம் எடுக்குமாறு ஸ்டெல்லாவிடம் பிரான்டன் கேட்டார். பதிலுக்கு தன்னையும் பிகினி உடையில் படம் எடுக்குமாறு ஸ்டெல்லா கேட்டுக் கொண்டார். அதன்படி எடுக்கப்பட்டதுதான் இந்தப் படம்.
இந்தப் படத்திற்கு லட்சக்கணக்கில் லைக் கிடைத்ததைப் பார்த்ததும் அழுது விட்டாராம் ஸ்டெல்லா. மேலும் தனது உடலைத்தான் இத்தனை பேரும் பார்த்துள்ளனர் என்றும் அவர் நினைத்து புகைப்படத்தையே எடுத்து விடலாமா என்று நினைத்தாராம். இருப்பினும் படத்தைப் பார்த்தவர்கள் கொடுத்த நல்ல கமெண்டுகளைப் பார்த்து சந்தோஷமடைந்த அவர் படத்தை எடுக்கும் முடிவைக் கைவிட்டாராம். அத்தனை பேரும் ஸ்டெல்லாவின் தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் வெகுவாகப் பாராட்டித் தள்ளியுள்ளனர் என்பது ஸ்டெல்லாவுக்கு பெரும் சந்தோஷத்தைக் கொடுத்துள்ளதாம்.
இதுகுறித்து ஸ்டெல்லா கூறுகையில், என்னைப் போன்ற உடல் அமைப்பு பெருத்த இளம் பெண்கள் படும் சிரமங்கள், கேலி, கிண்டல்களை நான் அறிவேன். தயவு செய்து பெண்களின் உடல் அழகைப் பார்க்காதீர்கள், மனங்களை மட்டுமே பாருங்கள். என் சைஸ் என்னவென்று கவலைப்படாதீர்கள் என்று கூறுகிறார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications