Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஒபாமா – ராம்னி மோதல்... என்ன சொல்லுது நம்ம ஊர் ஜோதிடம்? - எக்ஸ்க்ளூசிவ்

Subscribe to Oneindia Tamil

Obama and Romney
வாஷிங்டன்: அடுத்த நான்கு ஆண்டுகள், உலகத்தின் மிக உயர்ந்த ‘அமெரிக்க அதிபர்' பதவியில் அமரப்போவது யார்? என்ற கேள்விக்கான விடை தெரிய இன்னும் 15 நாட்களே உள்ளன.

அமெரிக்கா மட்டுமல்லாமல், உலகெங்கும் இந்த தேர்தல் அதிக எதிர்ப்பார்ப்புகளை எழுப்பியுள்ளது. ஈரான் அரசு கூட அமெரிக்காவுடன் அணுகுண்டு தயாரிப்பு குறித்து பேச்சு வார்த்தை நட்த்த தயாராக இருப்பதாகவும், ஆனால் அதிபர் தேர்தல் முடிவு தெரிந்த பிறகே தேதியை நிர்ணயிக்க விரும்புவதாகவும், செய்திகள் வந்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில், இன்று இரு ஒபாமாவும் ராம்னியும் மோதும் கடைசி நேரடி விவாதம் ஃப்ளோரிடா மாநிலம், போக்கோ ரிட்டோன் நகரத்தில் நடைபெற இருக்கிறது.

இன்றைய விவாதம் வெளியுறவு விவகாரங்கள் குறித்து என்று முடிவு செய்யப் பட்டிருந்தாலும், சந்தடி சாக்கில் இருவரும் உள்நாட்டு விவகாரங்களை கையிலெடுப்பார்கள் எனத் தெரிகிறது.

ஒருவர் மீது கடும் குற்றச்சாட்டுகளை அடுக்குவர் எனவும் எதிர்பார்க்கப் படுகிறது. ஒபாமா மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு இல்லை என்பதால், இன்று தான் அவர் கலந்துகொள்ளும் கடைசி அதிபர் விவாதம் என்பது குறிப்பிடத்தக்கது.

வெற்றிக் கணக்கு எப்படி இருக்கு?

முதல் விவாதத்தில் ராம்னி வெற்றி பெற்றார் என அறிவிக்கபபட்ட பிறகு, போட்டி படு தீவிரம் அடைந்து விட்டதாக அனைத்து அமெரிக்க மீடியாக்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். காலப் நிறுவனம் சென்ற வார நிலவரப்படி, ராம்னிக்கு நாடு தழுவிய அளவில் 51 சதவீதமும், ஒபாமாவுக்கு 45 சதவீதமும் ஆதரவு என கருத்துக் கணிப்பு வெளியிட்டுள்ளது.

இதைப் பார்ப்பவர்களுக்கு கண்டிப்பாக ராம்னி தான் வெல்லப்போகிறார் என்று தோன்றுவது இயற்கைதானே! ஆனால் அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு நாடு தழுவிய ஆதரவை விட, தனிப்பட்ட மாநிலங்களில் உள்ள ஆதரவு தான் முக்கியமானதாகும்.

முதியவர்களின் சொர்க்க பூமியில் கடும் போட்டி

முக்கிய மாநிலங்களில் ஒன்றான 29 வாக்குகள் கொண்ட ஃப்ளோரிடாவில் கடும் போட்டியுடன் 49 சதவீதம் ராம்னி, 48 சதவீதம் ஒபாமா ஆதரவு நிலவுவதாக சி.என்.என் கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது.

ஒய்வு பெற்றவர்கள், தங்களின் மீதி வாழ்க்கையை சீதோஷ்ண நிலை சீராக இருக்கும் ஃப்ளோரிடாவில்தான் கழிக்கின்றனர். அதனால் அங்கு அதிகப்படியான முதியவர்கள் வாக்கு வங்கி இருக்கிறது. 'ஒபாமாகேர்' மூலம் அவர்களின் மருத்துவச் செலவு குறைந்துள்ளது, ராம்னியின் திட்டத்தால் பெரும்பாலான முதியவர்களுக்கு காப்பீடு கிடைக்காது, மருத்துவச் செலவு அதிகரிக்கும் என்று ஜனநாயகக் கட்சியினர் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். இதன் மூலம் முதியவர்கள் வாக்கு யாருக்கு என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஹிஸ்பானிக் இன மக்களுக்கு ஆதரவான ஒபாமாவின் ட்ரீம் சட்டம் (Dream Act) , அவர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் ஃப்ளோரிடாவில், ஒபாமாவுக்கு வாக்குகளை அள்ளித்தருமா? என்ற கேள்வியும் எழாமல் இல்லை.
இந்நிலையில்ஃப்ளோரிடாவின், போக்கா ரிட்டோன் நகரில் இன்று நடைபெறும் இறுதி விவாதத்திற்கும் இயற்கையாகவே முக்கியத்துவம் கிடைத்துள்ளது.

ஒபாமா ஜாதகம் என்ன சொல்கிறது

இப்படி கடுமையான போட்டி நிலவும் சூழலில், நமது இந்தியமுறைப்படி ஜாதகரீதியாக யாருக்கு வெற்றி வாய்ப்பு என விரும்பினோம்.

நமக்கு கிடைத்த ஒபாமா, ராம்னி ஜாதக விவரங்களுடன் சென்னையைச் சேர்ந்த பிரபல ஜோதிடர் ஏ பாலசேகரனைச் சந்தித்தோம். தமிழகம் மட்டுமல்ல, இந்தியாவின் பல பிரபலங்களுக்கும் ஜாதகம் கணித்துத் தருவது இவர்தான்.

அமெரிக்க நேரடி விவாதங்களின் நாட்கள், தேர்தல் நாள் போன்ற விவரங்களைக் கேட்டுக் கொண்டார். அமெரிக்க தேர்தல் நிலவரம் குறித்து எந்த விவரங்களும் அறிந்திராத அவர், ஜாதக ரீதியாக வெற்றி வாய்ப்புகள் பற்றி கணித்துக் கூறியதை இங்கே தருகிறோம்.

முதல் விவாதம் - சுக்கிரன் சாதகமில்லை!

"முதலில் அக்டோபர் 3ம் தேதியை எடுத்துக்கொள்வோம். அந்த நாளில் ஒபாமாவுக்கு சுக்கிரன் நட்சத்திரம் சாதகமாக இல்லையாதலால் அவருக்கு அது எதிர்மறையாகத்தான் இருந்திருக்க வேண்டும்" என்றார் பாலசேகர்.

ஆனால், "அக்டோபர் 16ம் தேதி ராகு நட்சத்திரத்தால் ஒபாமாவுக்கு வெற்றியாக இருந்திருக்கும். வரப்போகும் அக்டோபர் 22 ம் தேதி விவாதமும் ஒபாமாவுக்கு சாதகமான சந்திரன் நட்சத்திரம் இருப்பதால் அவருக்கு மீண்டும் வெற்றிதான்," என்றார்.

ஒபாமாவும் குரு பெயர்ச்சியும்...

முதல் இரண்டு விவாத முடிவுகள் குறித்து நாம் ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தது நினைவிருக்கலாம்.

இறுதி விவாதத்தில் யார் வெற்றி பெறுவார் என்பது ஒரு புறம் இருக்கட்டும். தேர்தலில் வெற்றி யாருக்கு என்று கேட்டபோது, "தசாபுத்தியும், கோச்சாரமும் ஒபாமாவுக்கு சாதகமான நிலையில் இல்லை. ராம்னிக்கும் அவை சாதகமாக இல்லை.

குருபெயர்ச்சி ஒபாமாவுக்கு மிகவும் சாதகமாக இருக்கிறது. ராம்னிக்கு குரு பெயர்ச்சி மிக மோசமாக உள்ளது.

சனிப்பெயர்ச்சி ராம்னிக்கு சாதகமாக இருக்கும் போது, ஒபாமாவுக்கு பாதிக்கு பாதி என்ற நிலை தான்.

மேற்கண்ட வகையில் இரு ஜாதகங்களையும் அலசிப் பார்க்கும் போது, இருவருக்குமே கிட்டத்தட்ட சமநிலை என்பதால், போட்டி கடுமையாகவே இருக்கும்
ஒரே ஒரு வகையில் ஒபாமாவின் கை ஓங்கியிருக்கிறது. அதுதான் 'சூட்சமம்'. அதன் அடிப்படையில் பார்க்கும்போது, தேர்தல் நேரத்தில் ராகு சூட்சமம் நடைபெறுவதாலும், அது ஒபாமாவின் தசாபுத்தியின்படி சாதகமாக இருப்பதாலும் ஒபாமா நிச்சயம் வெற்றி பெறுவார். ஆனாலும் வெற்றியின் வித்தியாசம் குறைந்த சதவீதத்திலேயே இருக்கும்" என்று கணித்துச் சொன்னார்.

"சனி தசை பத்தொன்பது வருடங்களும், சனி தசையில் சனி புத்தி மூன்று வருடம் மூன்று நாட்களும், சனி அந்தரம் 5 மாதம் இருபத்தியோரு நாட்களும், சனி அந்தரத்திற்குள ராகு சூட்சமம் 20 நாட்கள் மட்டுமே இருக்கும். அந்த இருபது நாட்களுக்குள் தேர்தல் வருவதால் ஒபாமாவுக்கு வெற்றி கிட்டும்" என ஜாதக ரீதியாக பாலசேகர் விவரித்தார்.

ஒபாமா - ராம்னி ஜாதக ரீதியான பலன் எப்படி என்பதை, இன்று நடைபெறப் போகும் இறுதி நேரடி விவாதத்தில் யார் வெற்றி பெறப்போகிறார் என்று முதலில் பார்ப்போம்.

- ஒன் இந்தியா.தமிழ் எக்ஸ்க்ளூஸிவ்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+