'பச்சப்புள்ள' ஓ.பன்னீர்செல்வம் பெயரில் போலி டிவிட்டர் கணக்கு!

பட்ஜெட் தினத்தன்று உரை வாசித்துவிட்டு தான் உண்டு தன் வேலை உண்டு என்று சும்மா இருப்பவர் நிதியமைச்சர் ஓ. பன்னீர் செல்வம். கட்சியில் புதிதாக சேருபவர்கள் முதல்வரிடம் எந்த அளவிற்கு பணிவாக நடந்து கொள்ளவேண்டும் என்று க்ளாஸ் எடுப்பதும், மாவட்டம் தோறும் தொண்டர்கள் கூட்டம் நடத்துவதும்தான் இவரின் முக்கிய பணி.
கட்சி வட்டாரத்தில் ‘பச்சப் புள்ள' என்று பெயரெடுத்துள்ள ஒ.பி.எஸ் பெயரில் தற்போது டிவிட்டர் அக்கவுண்ட் தொடங்கப்பட்டுள்ளதாம். கடந்த 15ம் தேதி தொடங்கப்பட்ட இந்த அக்கவுண்ட்டில் புரட்சித்தலைவியின் ஆசியுடன் எனது டிவிட்டர் புரட்சியை ஆரம்பிக்கிறேன் என்று முதல் பதிவிடப்பட்டுள்ளதாம்.
அதிமுக, முதல்வரின் நிகழ்ச்சிகள் அப்டேட் செய்யப்படுகிறதாம். அதிமுகவின் அனைத்து எம்.எல்.ஏக்களும் இந்த டிவிட்டரில் இணைய இருப்பதால் பொதுமக்கள் தங்கள் குறைகளை டிவிட்டரில் தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளதாம்.
இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் இந்த டிவிட்டர் அக்கவுண்டில் இருந்து திருவல்லிக்கேணி சேப்பாக்கம் திமுக எம்.எல்.ஏ ஜெ. அன்பழகன் டிவிட்டர் அக்கவுண்டுக்கு ‘டேக்' செய்யப்பட்டிருக்கிறது. இதில் வரும் செய்திகளுக்கு அவர் கவுண்டர் கொடுக்க ஆரம்பித்திருக்கிறாராம்.
இந்த தகவல் இப்பொழுது ஒ.பி.எஸ் காதுக்கு போகவே அதை காலி செய்யும் முயற்சியில் இறங்கியிருக்கிறாராம் ஒ. பன்னீர் செல்வம்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications