டி.ஆர். பாலுவை விமர்சித்து பழனிமாணிக்கத்தை பேட்டி கொடுக்க சொன்னதே கருணாநிதி?

திமுகவைப் பொறுத்தவரை கருணாநிதான் தலைவர் என்றாலும் மு.க. ஸ்டாலின் கையே ஓங்கி வருகிறது. என்னதான் மு.க. அழகிரி அவ்வப்போது உதார்விட்டாலும் ஸ்டாலின் அணிதான் வலுவாக இருக்கிறது. அண்மையில் திமுக இளைஞர் அணி நிர்வாகிகளை மு.க. ஸ்டாலின் நியமித்திருந்தார். அதில் பல திமுக வாரிசுகளை ஓரம்கட்டியிருந்தார் அவர். இதில் கடுப்பாகிப் போன திமுக மாவட்டச் செயலர்கள், இதென்ன நியாயம் என்று கருணாநிதியிடம் புலம்பியிருக்கின்றனர். இப்படியே போனால் ஸ்டாலினின் கை ஓங்கிப் போய்விடும் என்றும் கூறியிருக்கின்றனர். இவற்றையெல்லாம் சந்திக்காதவரா கருணாநிதி! கட்சியில் எப்பவும் எனக்குத்தான் செல்வாக்கு என்று வெளிப்படுத்த பழனி மாணிக்கத்தைத் தூண்டிவிட்டு டி.ஆர். பாலுவை விமர்சிக்கச் சொன்னதாகக் கூறப்படுகிறது. இதனால் பழனி மாணிக்கத்தைக் கூப்பிட்டு பஞ்சாயத்து நடத்தி ஒரு அறிக்கை வெளியிட்டு தாமே கட்சியில் எப்பவும் முதலிடம்.. தமக்கே செல்வாக்கு என வெளிப்படுத்தியிருக்கிறாராம் கருணாநிதி என்கிறது அறிவாலய தகவல்கள். திமுகவில் அனைத்து மாவட்டங்களிலும் கோஷ்டி பூசல் இருந்தாலும் யாரும் யாரையும் விமர்சிப்பது இல்லை. ஆனால் பழனி மாணிக்கம் இப்படி பகிரங்கமாக பேட்டி கொடுக்க கருணாநிதி
யே காரணம் என்றும் அவரது ஆதரவு இல்லாமல் இப்படியெல்லாம் பேட்டி கொடுக்க முடியாது என்றும் சுட்டிக்காட்டுகின்றனர் திமுக உடன்பிறப்புகள்!
-
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
ஒதுங்கும் துரைமுருகன்.. திமுகவின் புதிய பொதுச்செயலாளராகிறாரா ஆ.ராசா? உதயநிதி ஸ்டாலினும் ஆதரவாம்! -
ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்த கருணாநிதி! திநகர் மாஜி எம்எல்ஏவை தட்டி தூக்கிய தவெக! -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்!











Click it and Unblock the Notifications