மக்களுக்காக 'இரங்கிய' வருணன்... குறைந்து போன 'கரண்ட்' தேவை!

தமிழகத்தை இதுவரை இப்படி ஒரு மின்வெட்டு ஆட்டிப் படைத்ததில்லை. கடந்த இரண்டு வருடங்களாகவே கடுமையான மின்வெட்டில் சிக்கித் தவித்து வருகிறார்கள் மக்கள். தொழில்கள் முடங்கிப் போய் விட்டன. வீட்டில் எந்த வேலையையும் செய்ய முடியவில்லை.
அரசும் மின்வெட்டுக்கு என்னென்னவோ காரணங்களைச் சொல்லிக் கொண்டுதான் உள்ளது. ஆனாலும் மின் பற்றாக்குறையைத் தீர்க்க உருப்படியான நடவடிக்கை எதையும் எடுத்தது போலத் தெரியவில்லை.
தலைநகர் சென்னையில் 2 மணி நேரமும், பிற பகுதிகளில் அதிகபட்சம் 16 மணி நேரமும் மின்தடை மக்களை வாட்டி வதைத்து வருகிறது.
இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக தமிழகம் முழுவதும் நல்ல மழை கொட்டி வருகிறது. வட கிழக்குப் பருவ மழையின் தொடக்கத்தால் இந்த மழை கிடைத்துள்ளது. இது மக்களுக்கு பல்வேறு வழிகளில் உதவியுள்ளது.
பருவ மழை காரணமாக மின்விசிறிகள், ஏசிகள் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்துவோர் அதிலிருந்து விடுபட்டு வருகின்றனர். காரணம், குளிர்ச்சியான சீதோஷ்ணம். இதன் காரணமாக மின்சாரத்தின் தேவை குறைந்துள்ளது. இதனால் பல இடங்களில் மின்வாரியமும், மின்தடை நேரத்தை ஓரளவு குறைத்துள்ளது.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்து வருவதால் மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் மின்நுகர்வோர்களுக்கு மின்சாரத்தின் தேவையும் குறைந்துள்ளது.
குறிப்பாக மழை காலமாக இருப்பதால் வீடுகளில் அதிக மின்சாரத்தை பயன்படுத்தும் ஏசி போன்ற மின் சாதன கருவிகள் மற்றும் மின்விசிறிகள் பயன்பாடுகள் குறைந்துள்ளது.
இதனால் தமிழகத்தில் 8 முதல் 10 மணிநேரம் வரை மின்வெட்டு செய்யப்பட்டு வந்த நிலை மாறி தற்போது 4 மணிநேரம் மட்டுமே மின்சாரம் தடை செய்யப்படுகிறது.
அரசு அலுவலகங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகள் தொடர்ந்து விடுமுறை அளிக்கப்பட்டு வருவதால் மின்சாரத்தின் தேவை குறைந்து வருகிறது.
மழையும் பெய்து வருவதால் காற்றாலை மூலமும் நேற்று 250 மெகாவாட் மின்சாரம் கிடைத்துள்ளது. இதனால் வீடுகளுக்கு மின்சாரம் தடை செய்யப்பட்டு வந்த நேரம் குறைக்கப்பட்டுள்ளது. இந்த நிலை இந்த வாரம் முழுவதும் அமலில் இருக்கும் என்று கூறுவதில் பெருமிதம் கொள்கிறோம். தொடர்ந்து பொதுமக்களுக்கு தங்குதடையின்றி மின்சாரம் வழங்கவே ஆசைப்படுகிறோம் என்றனர்.
அதுக்காக வருஷம் பூராவும் மழை பெய்யட்டும், காற்று வீசட்டும் என்று காத்திருக்க முடிவு செய்து விடாதீர்கள் புண்ணியவான்களே...!
-
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
Annamalai: பாஜக தலைவர்களுக்கு சுமையாக இருக்க விரும்பவில்லை! அண்ணாமலை உருக்கம்! -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
ஹார்டு டிஸ்க் மாயமா? மின்வெட்டு பிரச்சனையை திசை திருப்ப முயற்சி.. விளாசிய செந்தில் பாலாஜி -
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்!












Click it and Unblock the Notifications