டிஎன்பிஎஸ்சியில் நவீனத்தைப் புகுத்திய உதயச்சந்திரன் திடீர் மாற்றம்!
சென்னை: டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளராக திறம்பட செயல்பட்டு வந்த உதயச்சந்திரனை திடீரென குன்னூருக்குத் தூக்கியடித்துள்ளனர். அவரை
தமிழ்நாடு சிறு தேயிலை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சம்மேளன நிறுவனத்தின் (இன்ட்கோசர்வ்) தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக அரசு நியமித்துள்ளது.
இந்த மாற்ற உத்தரவை தமிழக அரசின் தலைமைச் செயலாளர் தேவேந்திரநாத் சாரங்கி பிறப்பித்துள்ளார்.
கடந்த திமுக ஆட்சிக்காலத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையின் ஆணையாளராக உதயசந்திரன் சிறப்பாக பணியாற்றியவர் உதயச்சந்திரன். பின்னர் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் டிஎன்பிஎஸ்சி செயலாளராக நியமித்தனர்.
ஜூன் மாதம் முதல் இந்தப் பொறுப்பை வகித்து வந்தார் உதயச்சந்திரன். இந்த காலகட்டத்தில், பல புதுமைகளை தேர்வாணையத்தில் புகுத்தியவர் உதயச்சந்திரன். அதாவது தேர்வுகளுக்காக இணையதளத்திலேயே விண்ணப்பிப்பது, ஹால் டிக்கெட்களை நாமாகவே டவுன்லோட் செய்து பெற்றுக் கொள்வது என பல நவீன உத்திகளைப் புகுத்தினார் உதயச்சந்திரன். இது தேர்வர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதோடு பல்வேறு தாமதங்களையும் தவிர்க்க உதவியது.
இந்த நிலையில்தான் உதயச்சந்திரன் மாற்றப்பட்டுள்ளார். ஏன் இந்த மாற்றம் என்பது தெரியவில்லை. ஏற்கனவே இன்ட்கோசர்வ் தலைவர் பதவியை உதயசந்திரன் 2001-ல் இருந்து சில காலம் கவனித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications