மத்திய அமைச்சரவை அக்.28-ல் மாற்றப்படுகிறது- எஸ்.எம். கிருஷ்ணா நீக்கப்படுகிறார்?

ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் ஆ.ராசா, தயாநிதி மாறன் மற்றும் வீரபத்ரசிங் உள்ளிட்டோர் ராஜினாமா செய்ததாலும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அமைச்சர்கள் ராஜினாமாவாலும் அமைச்சர்வையில் மாற்றம் செய்ய வேண்டிய நிலையில் மத்திய அரசு இருந்து வருகிறது.
அமைச்சர்கள் ராஜினாமா செய்தபோது ஒரு அமைச்சரே இரண்டு துறைகளைக் கவனிக்கும் வகையில் பொறுப்புகளைப் பிரதமர் மன்மோகன் சிங் ஒப்படைத்து வந்தார.
இது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் கடந்த வாரம் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியைச் சந்தித்துப் பேசினர். அதைத் தொடர்ந்து மத்திய அமைச்சரவை விரிவாக்கம் கடந்த 19-ம் தேதி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அமைச்சரவையில் சேருவோரின் பட்டியலை இறுதி செய்வதில் காங்கிரஸ் தலைவர்களிடையே கருத்து வேறுபாடு நிலவியதாகக் கூறப்படுகிறது.
மத்திய அமைச்சரவை மாற்றத்தில் தேசியவாத காங்கிரûஸச் சேர்ந்த தாரிக் அன்வருக்கு இடம் வழங்கப்படவுள்ளதை அக்கட்சியின் தலைவர் சரத் பவார் உறுதி செய்துள்ளார்.
கர்நாடக மாநில தேர்தலைக் கருத்தில் கொண்டு எஸ்.எம். கிருஷ்ணா மற்றும் பேணி பிரசாத் வர்மா, ஜெய்ஸ்வால், ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சுபோத் காந்த் சகாய், பி.ஏ. சங்மாவின் மகள் அகதா சங்மா, மகராஷ்டிரத்தைச் சேர்ந்த முகுல் வாஸ்னிக் ஆகியோர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்படுவர் எனக் கூறப்படுகிறது.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங்












Click it and Unblock the Notifications