முன்னாள் சென்னை அழகி மும்பையில் மர்ம மரணம்

மும்பையில் உள்ள அவரது வீட்டில் பிணம் கண்டெடுக்கப்பட்டது. அவருக்கு வயது 26 ஆகும். கடந்த 2006ம் ஆண்டு மிஸ் சென்னை அழகிப் போட்டியில் பட்டம் வென்றவர் பிதுஷி. இவர் கேரளாவைச் சேர்ந்த தனது கணவருடன் மும்பை அந்தேரி மேற்குப் பகுதியில் வசித்து வந்தார்.
திங்கள்கிழமை இரவு 9 மணிக்கு பிதுஷியின் கணவர் கேதார் வீட்டுக்கு வந்தபோது, கதவு பூட்டப்பட்டிருந்தது. இதையடுத்து பலமுறை காலிங் பெல்லை அழுத்தியும் கதவு திறக்கப்படவில்லை. இதையடுத்து அவர் தன்னிடமிருந்த இன்னொரு சாவியை வைத்து கதவைத் திறந்து உள்ளே சென்றார். அங்கு டிராயிங் ரூமில் பிதுஷி ரத்த வெள்ளத்தில் கிடப்பதைப் பார்த்து அதிர்ந்தார்.
இதையடுத்து உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். அங்கு அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
அவர் கொலை செய்யப்பட்டிருக்க வாய்ப்பில்லை என்று கருதப்படுகிறது. அவர் விழுந்து கிடந்த இடம் ஒரு கண்ணாடி ஷெல்ப் இருந்த இடமாகும். அவருக்கு சர்க்கரை வியாதி இருந்துள்ளது. எனவே மயக்கமடைந்து கண்ணாடி ஷெல்ப் மீது விழுந்து அதனால் கண்ணாடி உடைந்து குத்தி அவருக்கு ரத்தப்பெருக்கு ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இருப்பினும் போலீஸார் கொலை வழக்குப் பதிவு செய்து தொடர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அவரது கணவரையும் தீவிர விசாரணைக்குட்படுத்தியுள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications