For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரூ100 கோடி பேரம் - நவீன் ஜிண்டால், ஜீ தொலைக்காட்சி பரஸ்பரம் குற்றச்சாட்டு

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: தொலைக்காட்சிகள் மட்டும்தான் ரகசிய வீடியோக்களை வெளியிடனுமா என்ன? நாங்களும் வெளியிடுவோம் என்று சொல்லும் வகையில் ஜீ தொலைக்காட்சிக்கு எதிராக ஒரு பரபரப்பான வீடியோ வெளியிட்டிருக்கிறார் காங்கிரஸ் எம்.பியும் தொழிலதிபருமான நவீன் ஜிண்டால். ஆனால் ஜீ தொலைக்காட்சி நிர்வாகம் இதனை நிராகரித்துள்ளது.

இது தொடர்பாக நவீன் ஜிண்டால் கூறுகையில், ஜீ தொலைக்காட்சியினர் விளம்பரம் மூலமாக முதலில் ரூ20 கோடி பேரம் பேசினர். பின்னர் ரூ100 கோடி கொடுக்காவிட்டால் ஜிண்டால் குழுமத்துக்கும் நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழலில் உள்ள தொடர்பை வெளியிடுவோம் என்று மிரட்டினர். இதை நாங்கள் ரகசிய கேமிரா மூலம் பதிவு செய்திருந்தோம், அந்த காட்சி அடங்கிய சிடிக்களையே நாங்கள் வெளியிட்டிருக்கிறோம் என்றார் அவர்,
இது தொடர்பாக ஜீ தொலைக்காட்சி மீது வழக்கு ஒன்றையும் தொடர்ந்திருக்கும் ஜிண்டால், தொலைக்காட்சி ஒளிபரப்புக்கான உரிமம் என்பது செய்திகளை ஒளிபரப்பவே தவிர பிளாக்மெயில் செய்ய அல்ல என்று சாடியுள்ளார்.

ஜீ தொலைக்காட்சி மறுப்பு

ஆனால் ஜீ தொலைக்காட்சி இக்குற்றச்சாட்டை மறுத்திருக்கிறது. மிகப் பெரிய ஊழலை எவ்வளவு தொகை கொடுத்தாவது எப்படி பெரிய நிறுவனங்கள் மூடி மறைக்க முயற்சிக்கின்றன என்பதை அம்பலப்படுத்தவே நாங்கள் திட்டமிட்டிருந்தோம். இந்த நிலையில்தான் ஜிண்டால் ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார். ஜிண்டால் சொல்வது அனைத்தும் பொய் என்று ஜீ டிவி கூறியுள்ளது.

English summary
Congress leader and steel tycoon Naveen Jindal today held a press conference where he shared details of why his company has accused Zee News of attempted extortion. Mr Jindal says the TV channel told his company's officers that if they did not spend 100 crores on advertising, the channel would run unfavourable stories about how his firm was allocated coal fields.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X