For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மிகப் பெரும் நிலநடுக்கத்தை எதிர்கொள்ளப் போகிறதாம் இலங்கை!

By Mathi
Google Oneindia Tamil News

Sri Lanka
கொழும்பு: இலங்கையில் மிகப் பெரிய நிலநடுக்கம் ஏற்படக் கூடும் என்றும் இது பேரழிவை ஏற்படுத்தும் என்றும் இலங்கையின் பேரிடர் மேலாண்மை குழு வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

கொழும்பில் இலங்கையின் பேரிடர் கால நடவடிக்கைகளுக்காக குழுவின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், இலங்கையின் தென்மேற்கு கரை புவித் தட்டில் பிளவு ஏற்பட்டிருப்பட்டதாக நிலநடுக்க தடுப்பு நடவடிக்கை குழுவின் தலைவர் சகபந்து கூறியுள்ளார். குறிப்பாக இந்தோனேசியா- ஆஸ்திரேலியா புவிதட்டில் இப்பிளவு ஏற்பட்டிருக்கிறது. இதனால் இலங்கையில் மிகப் பெரிய நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பிருகிறது என்றார் அவர். கடந்த 1615ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட மிகப் பெரிய நிலநடுக்கம் மிகப் பெரும் உயிரிழப்பை ஏற்படுத்தியிருந்தது. அதைப் போன்ற ஒரு நிலநடுக்கம் வரக்கூடும் என்கின்றனர் புவியியல் வல்லுநர்கள்!

English summary
Sri Lanka can no longer be considered isolated from the effects of seismic activities, said chairman of the Sub Committee on Developing Building Guidelines for Earthquake Resistant Designs, of the Disaster Management Centre (DMC) K.L.S.Sahabandu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X