சென்னைக்கு ஓடிவந்த கர்நாடக சிறுமிகள்-பசி தாங்காமல் பிச்சை எடுத்த பரிதாபம்-பெற்றோரிடம் ஒப்படைப்பு
சென்னை: பள்ளி விடுதியில் வார்டன் திட்டியதால் அதிருப்தியடைந்த கர்நாடகாவை சேர்ந்த 2 பள்ளி மாணவிகள், சென்னைக்கு ஓடி வந்தனர். ஆனால் இங்கு சாப்பிட்டிற்கு வழியில்லாமல் தவித்த இருவரும் பிச்சை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. போலீசார் இருவரையும் மீட்டு, பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
கர்நாடக மாநிலம் கோலார் தங்க வயல் பகுதியை சேர்ந்தவர் சுவேதா, புவனேஸ்வரி. அதேபகுதியில் உள்ள பள்ளி விடுதி ஒன்றில் தங்கி 8ம் வகுப்பு படித்து வருகின்றனர். இந்த நிலையில் வீட்டில் யாரிடமும் தகவல் தெரிவிக்காமல், இருவரும் கடந்த 23ம் தேதி சென்னைக்கு ஓடி வந்துவிட்டனர்.
சென்னை கோயம்பேடு பகுதியில் சுற்றி திரிந்தனர். இதில் இருவரும் கொண்டு வந்த பணம் காலியானது. மேற்கொண்டு சாப்பிட்டிற்கு வழியில்லாமல் தவித்த இருவரும், கோயம்பேடு சிவன் கோவில் பகுதியில் பிச்சை எடுத்தனர். சிறுமிகள் நல்ல உடை அணிந்த நிலையில் பிச்சை எடுப்பதை கண்ட அப்பகுதியினர் சாப்பாடு கொடுத்து விசாரித்தனர்.
இதில் இருவரும் கோலாரில் இருந்து ஓடிவந்தது தெரியவந்தது. இதையடுத்து இரு மாணவிகளும் கோயம்பேடு காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். கோயம்பேடு போலீஸ் நிலையத்தை ஆய்வு செய்த போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், அந்த மாணவிகளிடம் விசாரித்தார்.
இதில் மாணவிகள் தங்கியிருந்த விடுதியின் வார்டன் திட்டியதால் அதிருப்தி அடைந்த இருவரும், அங்கிருந்து தப்பியோடி வந்ததாக தெரிவித்தனர். அதன்பிறகு இருவரின் பெற்றோரும், சென்னைக்கு வரவழைக்கப்பட்டனர். கமிஷனர் ஜார்ஜ் முன்னிலையில் மாணவிகள் இருவரும், அவர்களின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
-
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம்












Click it and Unblock the Notifications