உடனடியாக கூடுதல் மின்சாரம் வழங்குங்கள்...பிரதமருக்கு ஜெ. அவசர கடிதம்

இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதம்:
தமிழ்நாட்டில் நிலவி வரும் கடும் மின்சார பற்றாக்குறை பிரச்சினை குறித்தும், நெருக்கடியை ஓரளவுக்கு சமாளிக்கும் வகையில் தமிழ்நாட்டிற்கு கூடுதலாக ஆயிரம் மெகாவாட் மின்சாரம் வழங்க வேண்டியதன் அவசியம் தொடர்பாகவும் முன்னர் எழுதியிருந்த கடித விவரங்களை தங்கள் கவனத்திற்கு மீண்டும் கொண்டுவர விரும்புகிறேன்.
ஆயிரம் மெகாவாட் மின்சாரம் ஒதுக்கக்கோரியும் தமிழ்நாட்டிற்கு மிகக்குறைந்த அளவாக வெறும் 100 மெகாவாட் மின்சாரம் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்த அளவிலும் கூட தற்போது 78 மெகாவாட் மின்சாரம் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. தென்மேற்கு பருவமழை கைகொடுக்காததாலும், மின்பாதை நெருக்கடி காரணமாக தென்பிராந்தியத்தை தாண்டி வெளியே மின்சாரம் வாங்குவதில் சந்திக்கும் தடைகளாலும் தமிழ்நாட்டில் கடுமையான மின்பற்றாக்குறை பிரச்சினை நிலவி வருகிறது.
மாநிலத்தின் மொத்த மின்தேவைக்கும், மின்உற்பத்திக்கும் இடையே 4 ஆயிரம் மெகாவாட் அளவுக்கு பற்றாக்குறை இருக்கிறது. தென்பிராந்தியத்தில் தமிழகத்தில்தான் இந்த அளவு மின்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மின் பற்றாக்குறையை சமாளிக்க மின்வெட்டு செய்யப்படுவதால் நுகர்வோர்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.
ஏற்கனவே, தென்மேற்கு பருவமழை பொய்த்துப்போனதால் விவசாயத்துறை மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. விவசாயத்திற்கு தேவையான அளவு மின்சாரம் வழங்க முடியாததால் விவசாயத்துறை மேலும் பாதிப்புக்கு உள்ளாகி அதனால் உணவு உற்பத்தியும் பாதிக்கப்படும்.
மின்பாதை நெருக்கடி காரணமாக தமிழ்நாட்டில் மின்பற்றாக்குறை நிலைமை மேலும் மோசமடைந்திருப்பது குறித்து எனது முந்தைய கடிதங்களில் நான் சுட்டிக்காட்டி இருந்தேன். தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகத்தோடு போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி, தமிழகத்தின் மின்பற்றாக்குறையை ஓரளவு சமாளித்துக்கொள்ளும் வகையில் தேவையான ஆயிரம் மெகாவாட் மின்சாரம் கிடைப்பதை உறுதி செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு தங்களுக்கு தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வந்தேன்.
இந்த நிலையில், நாட்டின் தலைநகரான டெல்லி யூனியன் பிரதேசம் தனது பல்வேறு மத்திய மின்உற்பத்தி நிலையங்களில் இருந்து 1.11.2012 முதல் 31.3.2013 வரை 24 மணி நேரம் 230 மெகாவாட் அளவு மின்சாரத்தையும், நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 6 மணி வரை 1,491 மெகாவாட் மின்சாரத்தையும் ஒப்படைக்க திட்டமிட்டு இருக்கிறது.
இவ்வாறு ஒப்படைக்கப்படும் மின்சாரம் அனைத்தையும் (மொத்தம் 1,721 மெகாவாட்) அப்படியே தமிழ்நாட்டிற்கு மறுஒதுக்கீடு செய்யுமாறும், அந்த மின்சாரத்தை பெறும் வகையில் முன்னுரிமை அடிப்படையில் தேவையான மின்பாதையே ஏற்படுத்தி தருமாறும் மத்திய மின்அமைச்சகத்திற்கு தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
எனவே, தமிழ்நாட்டின் கடுமையான மின்பற்றாக்குறை நெருக்கடியை போக்கும் வகையில் தாங்கள் இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று அதில் கூறியுள்ளார்.
-
காதுகிட்ட கொசு கொய்ங்ன்னு சுத்துது.. நைட்டு ஃபுல்லா தூங்கல! முட்டுக்காட்டில் ரோட்டை மறித்த மக்கள்! -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை












Click it and Unblock the Notifications