என்னால் எந்தக் குறையும் வராது... மன்னிப்பு கேட்டார் பழனிமாணிக்கம்
சென்னை: என்னால் திமுகவுக்கோ, தங்களுக்கோ எந்தக் குறையும் வராது என்று கூறி திமுக தலைவர் கருணாநிதிக்கு மத்திய இணை அமைச்சர் பழனிமாணிக்கம் கடிதம் மூலம் மன்னிப்பு கோரியுள்ளார்.
டி.ஆர்.பாலுவுக்கும், பழனி மாணிக்கத்திற்கும் இடையே திடீரென முட்டல் மோதல் ஏற்பட்டுள்ளது. இது மீடியாக்கள் மூலம் வெளிச்சத்திற்கு வரவே கருணாநிதி அப்செட் ஆனார். பழனிமாணிக்கத்தைக் கூப்பிட்டு விளக்கம் கேட்டார். இந்த நிலையில் கருணாநிதிதான் இந்த நாடகத்திற்குக் காரணம் என்றும் பேச்சு கிளம்பியது. ஆனால் அதை மறுக்கும் வகையில் விரிவான அறிக்கை வெளியிட்டு தனது மன வேதனையை வெளிப்படுத்தினார் கருணாநிதி.
இந்த நிலையில் மன்னிப்பு கேட்டு கருணாநிதிக்கு கடிதம் எழுதியுள்ளார் பழனி மாணிக்கம். அதில் அவர் கூறியிருப்பதாவது:
தலைவர் கலைஞர் அவர்களுக்கு, வணக்கம். உடன்பிறப்புக் கடிதம் கண்டேன். தங்களின் துயரத்திற்கு நானும் காரணமாகிவிட்டேனே என்று துயரமும், வெட்கமும் அடைந்தேன். தந்தையில்லாத குறையைத் தீர்க்கும் தங்களுக்கு துயரம் தந்துவிட்டேனே.
இனி என் இறுதிநாள்வரை தங்களுக்கும், கழகத்திற்கும் என்னால் எந்தக் குறையும் வராது. நான் செய்த தவறுக்கு தங்கள் தாள் பணிந்து என்னை மன்னிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். தங்களையும், கழகத்தையும் உயிரெனக் காப்பேன் என்று அவர் கூறியுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications