ஜமைக்காவில் புயல்: லட்சக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம்-2 பேர் பலி
கிங்ஸ்டோம்: ஜமைக்கா நாட்டில் பயங்கர சூறாவளி காற்று மற்றும் மழை பெய்து வருவதால் முன்னேச்சரிக்கை நடவடிக்கையாக 2 லட்சத்திற்கு மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். புயலில் சிக்கி இதுவரை 2 பேர் பலியாகி உள்ளனர்.
ஜமைக்கா நாட்டில் 125 கி.மீ வேகத்தில் பயங்கர சூறைவளி காற்றும், 25 செ.மீ மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக நேற்று வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இதில் சிக்கி பொதுமக்கள் பாதிக்கப்படாமல் தடுக்க, முன்னேச்சரிக்கை நடவடிக்கையாக 2 லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் பாதுகாப்பாக இடங்களுக்கு அனுப்பப்பட்டனர்.
இந்த நிலையில் சக்தி வாய்ந்த புயல் நேற்று ஜமைக்காவை தாக்கியது. புயலில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மற்ற பாதிப்புகளில் இதுவரை 2 பேர் பலியாகி உள்ளனர். ஜமைக்காவை கடந்துள்ள புயல் தற்போது கியூபாவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. மேலும் பிளேரிடாவை தாக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
புயலில் ஏற்பட்ட வெள்ளத்தில் ஆறுகளில் இருந்த முதலைகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்துள்ளன. இவற்றை பிடிக்கும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளதாக அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஜமைக்காவை புயல் கடந்துவிட்ட போது கனமழை பெய்து, புயல் காற்று தொடர்ந்து வீசி வருகிறது. இதனால் அடுத்த 48 மணிநேரங்களுக்கு சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் யாரும் சாலைகளில் நடமாட வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாளை காலையில் இந்த புயல் பிளேரிடாவின் கடலோர பகுதிகளை கடக்கலாம் என்று எதிர்பார்ப்பதாக அமெரிக்க வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications