வீட்லேருந்து வேலை பார்த்தா இப்படியெல்லாம் பண்றாங்களாம்...!
லண்டன்: வீட்டிலிருந்து வேலை பார்ப்பது இப்போது சகஜமாகி விட்டது. ஆனால் வீட்டில் இருந்தபடி வேலை பார்ப்போர் உண்மையிலேயே வேலையைத் தவிர வேறு பல வேலைகளையும் நிறையவே செய்கிறார்களாம்.

அரக்கப் பறக்க ஓடத் தேவையில்லை
முன்பு போல ஆபீஸுக்கு அரக்கப் பறக்க ஓடி, சீட்டில் உட்கார்ந்து மாங்கு மாங்கென்று வேலை பார்த்த காலம் போய் விட்டது. ஆனால் வீட்டிலிருந்தபடி வேலை பார்ப்போர் உண்மையில் என்ன செய்கிறார்கள் என்பது குறித்து ஒரு சர்வே நடத்தியுள்ளனர். அதில கிடைத்துள்ள சமாச்சாரங்கள் படு சுவாரஸ்யமாக உள்ளன.

20 பேரில் ஒருவர் செக்ஸில்
வீட்டலிருந்து வேலை பார்ப்போரில் 20 பேரில் ஒருவர் வேலை நேரத்தில் வீட்டில் செக்ஸ் வேலைகளில் மும்முரமாக இருக்கிறார்களாம். அந்த நேரத்தில் ஆபீஸி்லிருந்து போன் வந்தால் டென்ஷனாகி விடுவதாக இவர்கள் குறைபட்டுக் கொள்கின்றனராம்.

'டவுசரில்' 64 சதவீதம் பேர்
64 சதவீதம் பேர் சாதாரண உடையில், அதாவது பைஜாமாவில் இருக்கிறார்களாம். நம்ம ஊர் கணக்குப்படி இதை ஜட்டி போடாமல் டிரவுசரில் இருப்பதாக எடுத்துக் கொள்ளலாம்.

'அது' கூட இல்லாமல் 19 சதவீதம் பேர்!
19 சதவீதம் பேர் டிரஸ்ஸே போடாமல் அம்மணக்க டொம்மணக்க கோலத்தில் உட்கார்ந்து வேலை பார்க்கிறார்களாம். வீட்டில் யாரும் இல்லாததால் இந்த சுதந்திரமாம்.

ஹலோ, டாய்லெட்ல இருக்கேன் பாஸ்..!
இன்னும் சிலர் ஆபிஸிலிருந்து வரும் போன்களை, பாத்ரூமில் உட்கார்ந்தபடி அட்டென்ட் செய்கின்றனராம். (போனில் பேசும்போது இரைச்சல், எக்கோ அடித்தால் பார்ட்டி பாத்ரூமில் என்று புரிந்து கொள்ளலாம்)

80 சதவீதம் பேர் டிவி பார்க்கிறார்கள்
80 சதவீதம் பேர் டிவி பார்த்தபடி வேலை செய்கிறார்களாம். அதேசமயம், 37 சதவீதம் பேருக்கு டிவி பார்ப்பது இடையூறாக இருப்பதாக சொல்லியுள்ளனர்.

72% பேர் பாத்திரம் கழுவுகிறார்களாம்!
72 சதவீதம் பேர் வேலை நேரத்தில் அப்படியே கிச்சனுக்குப் போய் பாத்திரம் துலக்குவது, துணி துவைப்பது போன்ற வேலைகளையும் செய்து கொள்கிறார்களாம்.

ஷாப்பிங் போறவாளும் இருக்கான்னா...
வேலை நேரத்தில் வீட்டை விட்டு வெளியேறி சின்னதாக ஒரு ஷாப்பிங் போய் வருகிறவர்களும் மூன்றில் ஒரு பங்கு பேர் உள்ளனராம்.

ஜிம்முக்கும் போறாங்கோ
பத்தில் ஒருவர் வேலை நேரத்தில் ஜிம்முக்குப் போய் உடம்பைத் தேற்றும் முயற்சியில் ஈடுபடுகின்றனராம்.

15 பர்சன்ட் பேர் தம்மடிக்கிறாங்க
15 சதவீதம் பேர் வேலை நேரத்தில் அவ்வப்போது தம் அடிப்பதில் செலவிடுகிறார்களாம். அவர்களில் 78 சதவீதம் பேர் அலுவலகத்தில் வேலை பார்க்கும்போது புகைப்பதை விட அதிக அளவில் வீட்டில் புகைப்பதாக கூறியுள்ளனர்.
-
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம்












Click it and Unblock the Notifications