கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராட ஈழத் தமிழர்களுக்கு அழைப்பு
யாழ்ப்பாணம்: கூடங்குளம் அணு உலையை இழுத்து மூட வேண்டும் என்று இலங்கையின் யாழ்ப்பாணத்தில் தீவிர பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது தொடர்பாக யாழ்ப்பாணத்தில் துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
அதில், கூடங்குளம் அணு உலையில் வெடிப்புக்களோ, கசிவோ ஏற்பட்டால் இலங்கைக்கு பேராபத்து என்றும், அணு உலையில் விபத்து ஏற்பட்டால் வடமாகாணம் முழுமையாகவும், புத்தளம், திருகோணமலை போன்ற மாவட்டங்களுடன் வேறு சில மாவட்டங்களும் பாதிப்படையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது,
கூடங்குளம் அணு உலைக்கு எதிராக தமிழகத்தில் போராடி வரும் நிலையில் இலங்கையிலும் போராட வேண்டும் என்றும் அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. மேலும் எதிர்காலத்தில் ஏற்படும் அழிவை நிறுத்துமாறு இந்திய, இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்த ஒன்றிணைந்து போராடுவோம் என்று யாழில் விநியோகிக்கப்பட்ட துண்டு பிரசுரத்தில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications