கட்டிப்பிடிக்கலாம், ஆனால் செக்ஸ் கூடாது..ஒரு மணி நேரத்திற்கு ரூ. 6020!
டோக்கியோ: ஜப்பானில் ஒரு வித்தியாசமான பிசினஸ் களை கட்டி கல்லாவை நிரப்பி வருகிறது. பெண்ணுடன் படுத்துத் தூங்கும் வாய்ப்பை இந்த வித்தியாசமான பிசினஸ் தருகிறது. அதேசமயம், செக்ஸ் உறவுக்கு இங்கு அனுமதி இல்லை. இந்த கட்டிப்பிடி தூக்க வைத்தியத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு குறைந்தது ரூ. 6020 கட்டணம் செலுத்த வேண்டும்.

கடில் ஷாப்
கடில் ஷாப் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த நூதன ஷாப்புக்கு ஜப்பானில் நல்ல ஆதரவு கிடைத்து வருகிறதாம். டோக்கியோவின் அகிபரா மாவட்டத்தில் இந்த ஷாப் திறக்கப்பட்டுள்ளது. இந்த ஊரே ஒரு கவர்ச்சிகரமான ஊர்தான். இங்கு பெண்களின் உள்ளாடைகள் ரொம்ப பிரபலம். அதேபோல செக்ஸ் ரீதியான விஷயங்களும் இங்கு ஏராளம்.

நோ செக்ஸ்..
இருப்பினும் இந்த கடில் ஷாப்பில் தூங்கவரும் ஆண்கள் பெண்களுடன் கட்டிப்பிடித்தபடி தூங்கவும், தலையைக் கோதி விளையாடவும் மட்டுமே அனுமதி. செக்ஸ் உறவுக்கு இங்கு கண்டிப்பாக அனுமதி கிடையாது.

செக்ஸ் சேவை அல்ல
தூங்குவதற்கு மட்டுமல்ல, வேறு பல வெரைட்டியான அம்சங்களும் இந்த கடில் ஷாப்பி்ல உள்ளது. இது செக்ஸ் சேவை அல்ல என்று கூறும் ஒரு கடில்ஷாப் உரிமையாளர் கூறுகையில், தனிமையில் தவிக்கும் ஆண்களுக்கு இது ஒரு நல்ல ரிலாக்சேஷனாக அமையும். நமக்கும் ஒருவர் இருக்கிறார் என்ற உணர்வை அது ஏற்படுத்த உதவும் என்றார்.

விருப்பத்திற்கேற்ற பெண்
இந்த ஷாப்புக்கு வரும் ஆண்கள், ஒரு மணி நேரத்திற்கு ரூ. 6020 கட்டணமாக செலுத்த வேண்டும். அவர்களின் விருப்பத்திற்கேற்ப ஒரு பெண் ஒதுக்கப்படுவார். அவருடன் மெனு கார்டில் உள்ள பல்வேறு சேவைகளை நீங்கள் பகிர்ந்து கொள்ளலாம். ஒவ்வொரு செயலுக்கும் தனித் தனியாக ஒரு கட்டணம் வைத்துள்ளனர். 7 பெண் ஊழியர்களுடன் ஒரு மாதத்திற்கு முன்புதான் இந்த ஷாப்பை திறந்தார் கோடா. அந்தப் பெண்களின் வயது 17 முதல் 25 வயது வரை உள்ளன. வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்ப உடை அணியுவும் செய்கிறார்கள் இவர்கள். ஆனால் இதற்குத் தனி கட்டணம் உண்டாம்.

மடியில் படிக்க ஸ்பெஷல் கட்டணம்
குறைந்தபட்சம் 20 நிமிடம் முதல் 10 மணி நேரம் வரை இந்தப் பெண்களுடன் தங்கிக் கொள்ளலாம். தரையில் படுத்துத் தூங்க விரும்பினால் அதற்கும் வசதி செய்து தருகிறார்கள். பெண்களின் மடியில் படுத்துத் தூங்க விரும்பினால் அதற்குத் தனியாக கட்டணம் தர வேண்டுமாம்.

தட்டி விடனும்னா தனி கட்டணம்
இந்த கட்டிப்புடி, தூக்கம் போக, மசாஜும் செய்கிறார்கள். இதற்கும் தனிக் கட்டணம். பெண்களின் தோளில் சாய்து கொண்டு தூங்குவது, பின்பக்கம் தட்டித் தருவது, தலையைக் கோதி விடுவது ஆகியவற்றுக்கும் தனித் தனிக் கட்டணமாம். 10 நிமிடங்கள் வரை ஒன்றாக கைகளைக் கோர்த்து வைத்துக் கொண்டிருப்பதற்கும் தனியாக ஒரு கட்டணம் வசூலிக்கிறார்கள்.

உத்துப் பார்த்தா ஒரு கட்டணம்
இதை விட தமாஷ் என்னவென்றால், உங்களுக்குப் பிடித்த பெண்ணுடன் நீங்கள் இருக்கும்போது அந்தப் பெண்ணின் முகத்தை நேருக்கு நேர் பார்த்து ஒரு நிமிடம் வரை கண்ணோடு கண் பார்த்தபடி இருக்கலாமாம். இதற்கும் தனியாக ஒரு கட்டணம் இருக்கிறதாம்.

கன்னத்தில் அடி கூட வாங்கலாமாம்
இதை விட பெரிய தமாஷ், பெண்ணின் கையால் உங்களது முகத்தில் ஒரு அறை வாங்க விரும்பினால் அதையும் செய்து கொள்ளலாம். அதற்கும் தனிக் கட்டணம். பெண்களின் கையால் செல்லமாக தட்டு வாங்க விரும்பும் ஆண்கள் அதிகம் உள்ளனர். அவர்களுக்காக இதையும் மெனுவில் சேர்த்துள்ளாராம் கோடா.
அட, என்னங்கடா, இது ரொம்ப வினோதமா இருக்கே...!
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications