இவங்க நல்ல டீச்சர், திட்டவே மாட்டாங்க, திட்டினா தூங்கிருவாங்க...!

இவரது பெயர் ஜேன் பார்லோ. ஸ்டாபோர்ட்ஷயரில் உள்ள மேரிஹில் உயர்நிலைப்பள்ளியில் உணவுத் தொழில்நுட்ப ஆசிரியையாக இருக்கிறார். 36 வயதாகும் இவருக்கு ஒரு பிரச்சினை உள்ளது. இவருக்கு கோபம் வந்தாலோ அல்லது உணர்ச்சிவசப்பட்டாலோ, அதிர்ச்சி அடைந்தாலோ, பலமாக சிரித்தாலோ, அதீதமாக தர்மசங்கடத்திற்குள்ளானாலோ உடனே தூக்கம் வந்து விடுமாம்.
இது அவரது டீன் ஏஜ் வயதிலிருந்தே இருந்து வருகிறதாம். இந்த பிரச்சினைக்குப் பெயர் நர்கோலெப்சி. இதுபோக அவருக்கு கெட்டபிளெக்ஸி என்ற உடல்நலப் பிரச்சினையும் உள்ளது. இது மிகவும் அரிதான உடல் நலக் கோளாறாகும். இது அவரது திசுக்களை பலவீனமாக்கி வருகிறதாம். சில நிமிடங்களுக்கு பேச முடியாமல், உடல் அசைவு இல்லாமல் பக்கவாதம் ஏற்பட்டு விடுமாம். இந்தப் பிரச்சினையையும் ஜேன் சந்தித்து தவித்து வருகிறார்.
இவருக்குத் திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. தனது பிரச்சினை குறித்து ஜேன் கூறுகையில், சில நேரங்களில் நான் மூச்சு விடுகிறேனா என்பது கூட எனக்குத் தெரியாது. என்னால் உணர முடியாது. அந்த அளவுக்கு நிலைமை மோசமாகி விடும். கை, கால்களைக் கூட அசைக்க முடியாது.
நான் கர்ப்பமாக இருந்தபோது, நடந்து சென்றபோது மாடியில் விழுந்து விட்டேன். ஆனால் அதிர்ஷ்டவசமாக அப்போது அங்கிருந்த எனது கணவர் என்னைத் தாங்கிப் பிடித்ததால் உயிர் தப்பினேன் என்றார்.
இந்தப் பிரச்சினைகளுக்கு மத்தியிலும் ஜேன் ஒரு சிறந்த ஆசிரியையாக செயல்பட்டு வருகிறாராம். வகுப்பில் பாடம் எடுக்கும்போது சற்றும் டென்ஷனாக மாட்டாராம். மாணவ, மாணவியர் சேட்டை செய்தாலும் அவர் அமைதியாக அதை சமாளிப்பாராம்.
தியானம் உள்ளிட்ட பல்வேறு உபாயங்கள் மூலம் தனது பிரச்சினைகளை சமாளித்துக் கொள்ளவும் பழகி விட்டாராம் ஜேன். வகுப்பில் பாடம் எடுக்கும்போது சிறிது கூட சும்மா இருக்க மாட்டாராம். உடலில் ஏதாவது ஒரு அசைவுடன்தான் இருப்பார். காலை மெதுவாக தரையில் தட்டியபடி இருப்பார். கைகளை மேசையில் தட்டியபடி இருப்பாராம்.
கோபப்படுவது, உணர்ச்சிவசப்படுவது, பலமாக சிரிப்பது உள்ளிட்ட அனைத்து உணர்வுகளையும் அவர் வெகுவாகக் குறைத்துக் கொண்டு விட்டார், கிட்டத்தட்ட மறந்து விட்டார் என்றே சொல்லலாம்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications