பிரான்ஸ் அமைச்சர் விளம்பரத்தில் நடிச்சாராம்.. நம்ம அமைச்சர்கள் நடிச்சா எப்படியிருக்கும்?
பிரான்ஸ் தொழில் துறை அமைச்சர் டி சர்ட், வாட்ச் விளம்பரத்தில் நடிச்சதால அந்த பொருட்களோட விற்பனை 2 மடங்கு அதிகமாயிருச்சாம். அவங்க மட்டும்தான் நடிப்பாங்களா.. நம்ம ஊர் ஓ.பி.எஸ், வளர்மதி, கோகுல இந்திரா உள்ளிட்டோருக்கும் நல்ல நடிப்பு திறமை இருக்கிறதே. அதை வைச்சு ஒரு சின்னக் கற்பனை விளம்பரம் இது...

சூடான பன்னீர் டீ...
முதலில் நிதி. அதாவது நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம்.. இவர் நடிக்க வருவதற்கு முன்பு அதாவது அமைச்சர் ஆவதற்கு முன்பு டீக்கடைதான் வைத்திருந்தார். இப்போதும் கடை இருக்கிறது, ஆனால் பன்னீர்தான் இல்லை. ஓ.பி.எஸ். டீ விளம்பரத்தில் நடித்தால் சூப்பராக இருக்கும். அவர் டேன் டீ விளம்பரத்தில் நடிக்கலாம். டீ யில் சிறந்தது டேன் டீ என்று கூறிவிட்டு அம்மா நான் சரியா சொன்னேனா? என்று படாரென குணிந்து ஒரு ஒப்புதலை வாங்கி விட்டால் டேக் ஓ.கே.தான்.

விஸ்வநாதன் இன்வெர்ட்டர்!
மின்சாரம்தானே இப்போதைக்கு மிகப்பெரிய பிரச்சினையா இருக்கு. அதனால அரசாங்கமே இன்வெர்ட்டர் தயாரிச்சு விற்பனை செய்யலாம்னு முடிவு செய்தால், அதற்கான விளம்பரத்தில் நத்தம் விஸ்வாதனையே போட்டுடலாம். மின்துறை அமைச்சராச்சே விளம்பரம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகும்.

ஊட்டச்சத்து பானம் வளர்மதிக்கு!
சமூக நலத்துறை அமைச்சர் வளர்மதிக்கு இந்த பதவி நித்திய கண்டம் பூர்ண ஆயுசுதான். அவர் ஊட்டச்சத்து மாவு விளம்பரத்தில் நடிப்பதன் மூலம் அவருக்கே பூஸ்ட் ஏற்படுத்திக் கொள்ளலாம்.

சுற்றுலாவுக்கு கூட்டம் கூட்ட கோகுல இந்திரா
குஜராத், கேரளா, போன்ற மாநிலங்களில் எல்லாம் சுற்றுலாத்துறை சார்பில் அழகாய் விளம்பரங்கள் வெளியிடப்படுகின்றன. மக்கள் கூட்டம் கூட்டமாய் அங்கு குவிகின்றனர். அதேபோல தமிழக சுற்றுலாத் தளங்கள் குறித்த விளம்பரப் படத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் கோகுல இந்திராவையே நடிக்க வைத்து விடலாம்.

டெங்கு விளம்பரத்தில் டாக்டர் விஜய்
ஊரெங்கும் டெங்கு பேச்சுதான். இதனால் சினிமா நடிகர்களை வைத்து அரசு விழிப்புணர்வு விளம்பரங்களை தயாரித்து ஒளிபரப்புகிறது. எதுக்கு வெட்டிச் செலவு.. பார்க்க படு ஷோக்காக இருக்கும் நம்ம சுகாதாரத்துறை அமைச்சர் விஜய்யையே இந்த விளம்பரத்தில் நடிக்க வைத்து விடலாமே.. விளம்பரத்தைப் பார்த்தாவது கொசுக்கள் தற்கொலை செய்து கொள்ளாமலா போய் விடும்..

ஒரு டிக்கெட்டுக்கு ஒரு டிக்கெட் இலவசம்!
ஏசி, டிவி என தனியார் பேருந்துகள் மக்களை கவர்ந்து விடுவதால். அரசு போக்குவரத்து கழக பேருந்துகள் டல்லடிக்கின்றன. அதனால் குடும்பத்தில் ஒருவர் அரசு பேருந்தில் பயணம் செய்தால் மற்றொருவருக்கு இலவச டிக்கெட் என்ற சலுகையை அறிவிக்கலாம். இதை விளம்பரப்படுத்த அமைச்சர் செந்தில் பாலாஜியே நடித்தால் கூட்டம் சும்மா குவியுமே?

டியூப்லைட் உதயக்குமார்
பவ்யமாய் இருந்து பச்சக் என்று ஒட்டிக்கொண்டவர் உதயகுமார். முதல்வரை வரவேற்று டியூப் லைட் போட்டார் என்று அவரின் பியூஸ் பிடுங்கப்பட்டது. இப்போது அமைச்சராக இல்லாவிட்டாலும் கூட இவர் தானாகவே ஒரு விளம்பரம் எடுத்து நடித்து அம்மாவின் கவனத்தையும் கவரலாம். பேசாமல் சோலார் எனர்ஜி விளம்பரத்தில் இவரை நடிக்க வைத்து விடலாம்...

''அம்மாவும் நீயே, அப்பாவும் நீயே''
லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்... பொன்னையன், செங்கோட்டையன், ஜெயக்குமார் போன்ற மாஜிக்கள் அத்தனை பேரும் படு பவ்யமாக ஒன்றாக கூடி வரிசையாக நின்று கூப்பிய கைகளும், மாரி பெய்யும் கண்களுமாக சோகக் குரலில் ஒரே கோரஸாக, அம்மாவும் நீயே, அப்பாவும் நீயே என்று இறைஞ்சிப் பாடும் ஒரு குரூப் பாடலையும் நமது எம்.ஜி.ஆர். பத்திரிக்கையிலும், ஜெயா டிவியிலும் விளம்பரமாகப் போடலாம்.. அம்மா மனம் இறங்காமலா போய் விடுவார்...

'அம்மா' இஸ் தி சீக்ரெட் ஆப் அவர் எனர்ஜி!
கட்டக் கடைசியாக விளம்பரத்தில் நடித்த அத்தனை பேரும் சேர்ந்து அம்மாவுடன் ஒரு கூட்டணியாக போஸ் கொடுத்து புகைப்படம் எடுத்துக் கொண்டு புல் பக்க பத்திரிக்கை விளம்பரம் கொடுத்தால்தான் இந்த வெளம்பரத்துக்கே தனி மரியாதை.. மறக்காமல் அத்தனை பேரும் அம்மா படம் போட்ட டி சர்ட்டை போட்டுக் கொள்ள வேண்டியது கட்டாயமாகும்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications