அமெரிக்காவை தாக்கும் சாண்டி புயல்- 60 பேர் வரை பலி- அதிபர் தேர்தல் பிரச்சாரம் முடக்கம்!
நியூயார்க்: அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நெருங்கிவிட்ட நிலையில் ஜமைக்கா பகுதியில் உருவான சாண்டி புயல் அமெரிக்காவை தாக்கி சுமார் 60 பேர் பலியாகி உள்ளனர். லட்சக்கணக்கானோர் கடுமையாக பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இதனால் அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரம் முடங்கிப் போயுள்ளது.
அமெரிக்காவில் அதிபர் தேர்தலுக்க்கான பிரச்சார புயல் களைகட்டி வருகிறது! நவம்பர் 6-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற இருக்ல்கிறது. இந்நிலையில் கரீபியன் கடற்பரப்பில் சாண்டி என்ற புயல் உருவாகி ஜமைக்கா, கியூபா நாடுகளில் பெரும் சேதத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இப்புயல் அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை பகுதியை நோக்கி நகர்ந்து இன்று வெர்ஜினியா, மேரிலாந்து மற்றும் புளோரிடா மாகாணங்களை தாக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அமெரிக்காவில் நிலை கொண்டிருக்கும் சாண்டி புயல் இதுவரை 60 பேரை பலி கொண்டிருக்கிறது. பல லட்சம் பேரை இடம்பெயர வைத்திருக்கிறது. இச்சூறாவளியால் பல குடியிருப்புக்கள் சேதமடைந்துள்ளதுடன், மரங்கள் முறிந்து வீடுகளிலும் மின்கம்பங்களிலும் வீழ்ந்துள்ளன. இதனால் அங்கு மின்தடை ஏற்பட்டுள்ளதுடன், போக்குவரத்தும் ஸ்தம்பிதமடைந்துள்ளது.
இப்புதிய சூறாவளியால் ஏற்பட்ட சேதங்களை நிவர்த்திசெய்வதற்கு பில்லியன் டாலர்கள் தேவைப்படுவதாக அமெரிக்க தகவல்கள் தெரிவிக்கின்றன. கரீபியன் கடலிலிருந்து மணிக்கு சுமார் 75 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசுவதாகவும் கூறப்படுகிறது.
பிரச்சாரம் பாதிப்பு
சாண்டி புயல் ஒபாமா மற்றும் ரோம்னியின் தேர்தல் பிரச்சாரத்தை பாதித்திருக்கிறது. இன்று இரவு வெர்ஜினியா கடற்கரையில் பேச இருந்தார் ரோம்னி. இதேபோல் புளோரிடாவில் ஒபாமா பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார். இரண்டு கூட்டங்களுமே ரத்து செய்யப்பட்டுவிட்டது. புயலுக்குப் பிறகு சூறாவளியாக இருவரும் கடைசி கட்ட பிரச்சாரத்தை மேற்கொள்ள இருக்கின்றனர்.
இதனிடையே அமெரிக்காவில் முன்கூட்டியே வாக்களிக்கும் முறை நடைமுறையில் இருப்பதால் அதிபர் ஒபாமா வெள்ளிக்கிழமையன்று வாக்களித்திருந்தார். இதேபோல் பல்வேறு மாகாணங்களில் வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. இந்த வாக்குப் பதிவிலும் கூட ஒபாமாதான் முன்னிலையில் இருப்பதாக கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications