60 வயது மாடல் பாட்டியின் அட்டகாச அழகு... மதுவை விட்டதால் கிளாமர் கூடியதாம்!

Subscribe to Oneindia Tamil

Marie Helvin
லண்டன்: இங்கிலாந்தைச் சேர்ந்த 60 வயதான மாடல் அழகி, கட்டழகு இளம் பெண்களுடன் இணைந்து கேட்வாக் போட்டு அனைவரையும் அசத்தினார். இளம் மாடல்களுக்கு இணையான அழகுடன் அவர் நடை போட்டு வந்தது அனைவரையும் கவர்ந்தது.

இந்த வயதிலும் தான் இத்தனை கட்டழகுடன் இருப்பதற்கு மதுப் பழக்கத்தை விட்டதே காரணம் என்று அவர் பெருமை பொங்கக் கூறியுள்ளார்.

அந்தப் பாட்டியின் பெயர் மேரி ஹெல்வின். 60 வயதான இவர் முன்னாள் மாடல் அழகி. பேஷன் போட்டோகிராபர் டேவிட் பெய்லியின் முன்னாள் மனைவி. இவர் லண்டன் லிஞ்சரி பேஷன் ஷோவில் 23 வயது பீச்சஸ் ஜெல்டாப், 26 வயது அப்பே கிளான்சி உள்ளிட்டோருடன் இணைந்து கேட் வாக் போட்டு அனைவரையும் கதி கலக்கினார். சும்மா சொல்லக் கூடாது, இளசுகளுக்கு இணையான கட்டழகுடன் மேரி நடந்து வந்ததால் அனைவரும் வியந்து போய் பார்த்தனர்.

இதுகுறித்து அவர் கூறுகையில், நான் முன்பு நிறைய மது அருந்தினேன். எட்டு மாதங்களுக்கு முன்புதான் அதை விட்டேன். இப்போது சுத்தமாக குடிப்பதில்லை. இதனால்தான் என்னுடைய அழகு என்னை விட்டுப் போகவில்லை. கட்டுக்குலையாமல் இருக்கிறேன்.

6 வருடத்திற்குப் பிறகு இப்போதுதான் முதல் முறையாக கேட் வாக் செய்துள்ளேன். எனக்கு இப்போது 60 வயதாகிறது. இதுவரை ஒருபோதும் என்னை செக்ஸியான பெண் என்றோ, நல்ல ஷேப்புடன் இருப்பதாகவோ நினைத்ததில்லை. ஆனால் இப்போது அப்படி நினைக்கத் தோன்றுகிறது என்றார் சிரித்தபடி.

மேலும் அவர் கூறுகையில், எனது கட்டழகை மேலும் பொலிவாக்க நான் கடுமையாக ஜிம்மில் உழைத்து வந்தேன். இதனால்தான் என்னால் இளம் பெண்களுக்கு இணையாக நடைபோட முடிந்தது என்றார்.

இளம் மாடல்களுக்கு போட்டியாக மேரியும் கருப்பு நிற பிரா மற்றும் பேண்டீஸ் அணிந்து வந்தபோது அனைவரும் கைத்தட்டல் மழை பொழிந்து விட்டனர்.

70களில் அட்டகாசமான சூப்பர் மாடலாக திகழ்ந்தவர் இந்த மேரி. ஹவாயில் பிறந்து வளர்ந்தவர். பலருடன் இணைத்து அந்தக் காலத்தில் கிசுகிசுக்கப்பட்டவர். ஆனால் ஒரே ஒரு கல்யாணம்தான் செய்தார் என்பதுதான் சுவாரஸ்யமானது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+