ஜெயலலிதாவை சந்திக்க மேலும் 5 தேமுதிக (விஜயகாந்த்) எம்.எல்.ஏக்கள் விருப்பம்
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க விரும்புவதாக தேமுதிகவைச் சேர்ந்த மேலும் ஐந்து எம்.எல்.ஏக்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பான மனுவை கொடுக்க முதல்வரின் தனிச் செயலாளரை அவர்கள் அணுகியபோது அதைப் பெற்றுக் கொள்ள அவர் மறுத்து விட்டார்.
முதல்வர் ஜெயலலிதாவை தேமுதிகவைச் சேர்ந்த அதிருப்தி எம்.எல்.ஏக்கள் சுந்தரராஜன், மைக்கேல் ராயப்பன், தமிழழகன், நடிகர் அருண் பாண்டியன் ஆகியோர் சமீபத்தில் சந்தித்து அரசைப் புகழ்ந்து பேசி விட்டு வந்தனர்.
இதனால் விஜயகாந்த்தும், தேமுதிகவினரும் கடும் கொதிப்படைந்துள்ளனர். இதுதொடர்பாக முதல்வர் ஜெயலலிதாவை கடுமையாக சாடிப் பேசியிருந்தார் விஜயகாந்த். இந்த நிலையில் நேற்று அதிரடியாக அவர் உள்ளிட்ட ஐந்து தேமுதிக எம்.எல்.ஏக்கள் முதல்வரை சந்திக்க விரும்புவதாகவும், தொகுதிப் பிரச்சினைகள் குறித்துப் பேச விரும்புவதாகவும் கூறி சட்டசபை சபாநாயகர் தனபாலிடம் மனு கொடுத்தனர்.
இந்த நிலையில் இன்று மேலும் ஐந்து தேமுதிக எம்.எல்.ஏக்கள் முதல்வரைச் சந்திக்க மனு கொடுக்க முயன்றனர். வெங்கடேசன், நல்லதம்பி, செங்கம் சுரேஷ், சம்பத், தினகரன் ஆகியோர் முதல்வர் ஜெயலலிதாவின் தனிச் செயலாளர் ஆண்டியப்பனை அணுகி விருப்ப மனுவைக் கொடுக்க முயன்றனர். ஆனால் அதைப் பெற்றுக் கொள்ள அவர் மறுத்து விட்டார்.
இதையடுத்து வெளியே வந்த அவர்கள் பதிவுத் தபால் மூலம் இந்த அனுமதி கோரும் கடிதத்தை முதல்வருக்கு அனுப்பி வைக்கவுள்ளதாக தெரிவித்தனர்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications