கழுத்தை நெரிக்க முயன்ற காதலனின் விரலைக் கடித்துத் துப்பிய காதலி
சிகாகோ: தனது குழந்தைகள் முன்பு தனது கழுத்தை நெரிக்க முயன்ற காதலனின் விரலைக் கடித்துத் துப்பி விட்டார் காதலி. நல்ல வேளை இது இங்கு நடக்கவில்லை, அமெரிக்காவின் சிகாகோவில் நடந்துள்ளது.
விரலைப் பறி கொடுத்த நபரின் பெயர் ஜெர்ரி ஸ்டீவன்சன். வயது 38. இவரது காதலியின் பெயர் வெளியிடப்படவில்லை. ஆனால் அவருக்கு 45 வயதாகிறது.
சம்பவத்தன்று ஜெர்ரிக்கும், அவரது காதலிக்கும் கடும் வாக்குவாதம் மூண்டது. ஒரு கட்டத்தில் ஜெர்ரி தனது கைத்துப்பாக்கியை எடுத்து காதலியை மிரட்டியுள்ளார். இதனால் பயந்து போன காதலி வீட்டுக்குள் ஓடியுள்ளார். ஆனாலும் விடாமல் துரத்திய ஜெர்ரி, தனது காதலியின் கழுத்தை நெரித்துக் கொல்லப் பார்த்தார். இதையடுத்து ஜெர்ரியின் காதலை, படக்கென்று ஜெர்ரியின் கையைப் பிடித்து விரலைப் பலமாக கடித்தார். இதில் ஒரு விரல் துண்டாகி விட்டது.
இதனால் அலறித் துடித்த ஜெர்ரி, துண்டாகிப் போன விரலுடன் மருத்துவமனைக்கு ஓடினார். அங்கு டாக்டர்கள் விரலை மீண்டும் ஒட்ட வைத்து அறுவைச் சிகிச்சை செய்து சரிப்படுத்தி விட்டனர்.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய போலீஸார், ஜெர்ரி மீது வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனர். தற்காப்புக்காகவே விரலைக் கடித்ததால் அவரது காதலி மீது வழக்குப் பாயவில்லை.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications