ஆவின் பால் அட்டை விலை குறைப்பு- மதுரை கலெக்டர் அன்சுல்மிஸ்ரா அறிவிப்பு!
மதுரை: மதுரையில் ஆவின் வாடிக்கையாளர்களுக்கு மாதாந்திர அட்டை மூலம் வழங்கும் ஆவின் பாலுக்கு விலை குறைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மதுரை மாவட்ட கலெக்டர் அன்சுல் மிஸ்ரா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
மதுரை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் ஆவின் பாலுக்கு பல ஆயிரம் வாடிக்கையாளர்கள் உள்ளனர். இந்த வாடிக்கையாளர்களுக்கு மாதாந்திர அட்டை மூலம் பால் வழங்கப்பட்டு வருகிறது.
வரும் 16.11.2012 முதல் பால் கார்டுகள் மூலம் ஆவின் பால் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு சலுகையாக லிட்டருக்கு 75 பைசா வீதம் விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது. 30 நாட்கள் கொண்ட ஆவின் பசும் பால் அட்டை விலை ரூ.439க்கும், 31 நாட்கள் கொண்ட பால் அட்டையின் விலை ரூ.453.50க்கும் பெற்று கொள்ளலாம்.
ஆவின் வாடிக்கையாளர்கள் வரும் 2.11.2012 முதல் பால் கார்டுகள் வாங்கும் போது குறைக்கப்பட்ட விலையில் பால் கார்டுகளை பெற்று கொண்டு பயனடையுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் விசேஷ நிகழ்ச்சிகளுக்கு தேவையான பாலை மத்திய பண்ணையில் நேரிடையாக வாங்குபவர்களுக்கு அதிகபட்ச சில்லரை விலையிலேயே வழங்கப்படும். திருமண மண்டபங்களுக்கு ஆவின் வாகனம் மூலம் விசேஷ நிகழ்ச்சிகளுக்கு சப்ளை செய்யும் போது, லிட்டருக்கு ரூ.1 போக்குவரத்து கட்டணமாக வசூலிக்கப்படும்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆவின் இனிப்பு வகைகளை மொத்தமாக வாங்க விரும்புவோர் முன் கூட்டியே பணம் செலுத்தி, தேவைக்கேற்ப குறித்த நேரத்தில் பெற்று கொள்ளலாம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications