எம்.எல்.ஏ கைது குறித்துப் பேச அனுமதி மறுப்பு... தேமுதிக வெளிநடப்பு
சென்னை: சென்னை விமான நிலையத்தில் செய்தியாளரைத் தாக்கிய வழக்கில் தேமுதிக எம்.எல்.ஏ அனகை முருகேசன் கைது செய்யப்பட்டது குறித்து பிரச்சினை எழுப்ப முயன்ற தேமுதிக உறுப்பினர்களுக்கு சபாநாயகர் அனுமதி மறுத்தார். இதைக் கண்டித்து அவர்கள் வெளிநடப்பு செய்தனர்.
சமீபத்தில் சென்னை விமான நிலையத்திற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வந்தபோது அவரிடம் கேள்வி கேட்க முயன்ற செய்தியாளர் பாலுவை தரக்குறைவாக பேசினார். நாயே என்றும் திட்டினார். அப்போது செங்கல்பட்டு தொகுதி தேமுதிக உறுப்பினர் அனகை முருகேசன் என்பவர் செய்தியாளர் பாலுவைப் பிடித்துக் கீழே தள்ளி விட்டார்.
இதுதொடர்பாக போலீஸார் விஜயகாந்த், முருகேசன் ஆகியோர் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதில் அனகை முருகேசன் கைது செய்யப்பட்டுள்ளார். விஜயகாந்த்தும் கைது செய்யப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்த நிலையில், இன்று சட்டசபையில் முருகேசன் கைது விவகாரத்தை எழுப்பி பேச முயன்றனர் தேமுதிக எம்.எல்.ஏக்கள். ஆனால் அதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்தார். இதையடுத்து தேமுதிக எம்.எல்.ஏக்கள் அனைவரும் வெளிநடப்புச் செய்து வெளியேறினர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications