சட்டசபை வைரவிழாவுக்கு பிரணாப் வருகிறார்: ஜெ.

இதுதொடர்பாக சட்டசபையில் 110-வது விதியின் கீழ் முதல்வர் ஜெயலலிதா வாசித்த அறிக்கை:
இந்திய நாடு சுதந்திரம் அடைந்த பிறகு இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி 1952-ஆம் ஆண்டு அமைக்கப்பெற்ற தமிழ்நாடு சட்டசபை இந்த ஆண்டு 60 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதை அடுத்து தமிழ்நாடு சட்டசபையின் வைர விழா சென்னை, புனித ஜார்ஜ் கோட்டையில் அமைந்துள்ள தமிழ்நாடு சட்டமன்ற மண்டபத்தில் 30.11.2012 அன்று, வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.
30.11.2012 அன்று நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டசபையின் வைர விழாவில் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு மேதகு இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அவர்களை அழைக்கும் பொருட்டு சட்டமன்ற சபாநாயகர், நிதியமைச்சர், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர், 26.10.2012 அன்று, டெல்லியில் உள்ள, குடியரசுத் தலைவர் மாளிகையில், அவரை நேரில் சந்தித்து எனது அழைப்புக் கடிதத்தை வழங்கி அழைப்பு விடுத்தனர்.
எனது அழைப்பினை ஏற்றுக் கொண்டு, 30.11.2012 அன்று நடைபெறவுள்ள, தமிழக சட்டசபையின் வைர விழாவில் கலந்து கொள்ள இந்தியக் குடியரசுத் தலைவர் 29.10.2012 தேதியிட்ட கடிதம் மூலம், இசைவு தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு சட்டசபையின் வைர விழாவிற்கு தலைமை தாங்குமாறு தமிழ்நாடு ஆளுநர் ரோசைய்யா அவர்களை இன்று ஆளுநர் மாளிகைக்கு சென்று, நேரில் நான் அழைப்பு விடுத்தேன்.
எனது அழைப்பினை ஏற்று, தமிழக ஆளுநர் அவர்களும் இந்த விழாவிற்கு தலைமை தாங்க தனது இசைவினைத் தெரிவித்தார் என்பதை, இந்த மாமன்றத்திற்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த விழாவிலே கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு இந்த மாமன்றத்தின் உறுப்பினர்கள் அனைவரையும் தங்கள் வாயிலாக கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications