திருப்பரங்குன்றம் மலை உச்சியில் வெடிகுண்டுகளால் பரபரப்பு
மதுரை: திருப்பரங்குன்றம் மலையின் மேல் சக்தி வாய்ந்த வெடி குண்டுகள் செய்யப் பயன்படும் மூலப் பொருட்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
திருப்பரங்குன்றம் மலை மேல் வெடி குண்டுகள் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து மலை மீது சென்ற போலீசார் அங்கே பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு பிளாஸ்டிக் வாளியை கைப்பற்றினர்,
அதில் நிப்போ 9 வோல்ட் பேட்டரிகள்- 16, சிறிய ரக பென்டார்ச் பேட்டரிகள் 6, சுவிட்ச் 8, டைமர் 4, அலுமினியப் பவுடர் 1 கிலோ, வயர் 2 ரோல், பிவிசி பைப் 3, அதற்கான பைப் மூடிகள் 6, பெட்ரோல் 600 மிலி, சணல் பந்து 2, வெடி பொருள் சுற்றப்பட்ட நிலையில் சணல் பந்து 2, செல் போன்கள் 2 ஆகியவை இருந்தன.
திருப்பரங்குன்றத்தில் வருகின்ற நவம்பர் 27ந் தேதி கார்த்திகை தீபத் திருவிழா நடைபெறவுள்ளது. ஏற்கெனவே, இங்கே மலை மேல் தீபம் ஏற்றி வந்த விழா, மதப் பிரச்னைகளைக் காரணம் காட்டி பெரும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு முறையும் இந்து இயக்கங்கள் மலை மேல் தீபம் ஏற்றும் தங்கள் உரிமையை வெளிப்படுத்த முயற்சிப்பதால் பதற்றம் உருவாகும். இந்நிலையில் கார்த்திகை நேரத்தில் இதுபோன்ற வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications