கடன் தொல்லை: மனைவியின் காதில் விஷத்தை ஊற்றிவிட்டு தற்கொலைக்கு முயன்ற வியாபாரி
சேலம்: சேலத்தில் கடன் தொல்லையில் மனமுடைந்த பால் வியாபாரி ஒருவர், தனது மனைவியின் காதில் பூச்சி மருந்தை(விஷம்) ஊற்றிவிட்டு, தானும் அதை குடித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றார். இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த பெரியேரி என்ற பகுதியை சேர்ந்த பால் வியாபாரி ரமேஷ்(29). இவரது மனைவி ராஜேஸ்வரி(24). இவர்களுக்கு பாரத்(7), அனுஷ்கா(3) என்ற இரு குழந்தைகள் உள்ளனர்.
ரமேஷ் நடத்தி வந்த பால் வியாபாரத்தில் அதிக நஷ்டம் ஏற்பட்டதால், சுமார் ரூ.3 லட்சம் வரை கடன் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட ரமேஷ் தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தார். மேலும் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற மனைவியிடம் கூறி வந்துள்ளார். ஆனால் ரமேஷை ஆறுதல்படுத்திய ராஜேஸ்வரி, கடனை கட்டிவிடலாம் என்று தைரியப்படுத்தி வந்தார்.
இந்த நிலையில் நேற்று ராஜேஸ்வரி தூங்கி கொண்டிருந்த போது, அவரது காதில் ஏதோ கசிவது போல உணர்ந்து கண் திறந்து பார்த்தார். அப்போது ரமேஷ், அவரது காதில் பூச்சி மருந்தை ஊற்றவதை கண்டார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த ராஜேஸ்வரி, பூச்சி மருந்தை தட்டிவிட்டார்.
இதனால் பூச்சி மருந்து ராஜேஸ்வரியின் கண், முகம் ஆகிய இடங்களில் தெறித்து, பட்ட உடல் பகுதிகள் வீங்கியது. மேலும் சிறிது நேரத்தில் பூச்சி மருந்தை குடித்த ரமேஷூம் மயங்கி விழுந்தார். ராஜேஸ்வரியின் அலறல் சத்தம் கேட்டு, அப்பகுதியினர் ஓடிவந்தனர். இருவரையும் மீட்டு, ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தலைவாசல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications