‘நிலம்’ கரையை கடந்தும் வடியாத வெள்ளம்: விவசாயிகள் பாதிப்பு

நிலம் புயல் ஆடிய கோரத்தாண்டவத்தினால் காவிரி டெல்டா மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டிணம் உள்ளிட்ட மாவட்டங்களில் சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.
நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்
புயல் கரையை கடந்தும் வெள்ளநீர் வடியாத காரணத்தால் 1 லட்சத்து 3 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் கவலையடைந்துள்ள விவசாயிகள், தங்களுக்கு உரிய நிவாரணம் வழங்கவேண்டும் என்று அதிகாரிகளிடம் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சாய்ந்த வாழை மரங்கள்
வேலூர், திருவண்ணாமலை. கடலூர் மாவட்டங்களில்ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் அடியோடு நாசமடைந்துள்ளன. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் புயலின் தாக்குதலுக்கு 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட வாழை மரங்கள் சரிந்தன. குலை தள்ளிய மரங்களும் சாய்ந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கீரப்பாளையத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்தன. அதிகாரிகள் விரைவில் கணக்கெடுத்து உரிய இழப்பீடு வழங்கவேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
போக்குவரத்து துண்டிப்பு
கடலூர் அருகே திருமானிக்குழி பாலத்தின் மீது 2 அடி உயரத்துக்கு மேல் வெள்ளம் பாய்ந்தோடுவதால் திருமானிக்குழி, ஓட்டேரி உள்ளிட்ட 10 கிராமங்களின் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. கிராமங்கள் மட்டுமின்றி, நகரப்பகுதிகளிலும் வெள்ளம் காணப்படுகிறது.
தொடரும் கணக்கெடுப்பு
திருவண்ணாமலை மாவட்டத்திலும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. வாழைகள் மற்றும் வீடுகள் சேதமடைந்துள்ளன. 200க்கும் மேற்பட்ட தேக்கு மரங்கள் சரிந்து விழுந்தன. விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா பகுதியில் 10 ஏக்கர் நடவு பயிர் சேதமடைந்துள்ளது. உப்புவேலூர் குறுவட்டத்திற்குட்பட்ட காரட்டை, கிளாப்பாக்கம் முதல் கொஞ்சு மங்கலம் வரையில் உள்ள 20 கிராமங்களில் சம்பா நடவு பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளது. மேலும், மழையால் பாதிக்கப்பட்ட கால்நடைகள் மற்றும் சேதமடைந்த வீடுகள், மின்கம்பங்கள் குறித்து கணக்கெடுப்பு நடந்து வருகிறது.
நிலம் புயல் கரை கடந்த பிறகு வலுவிழந்து ஆந்திராவில் மையம் கொண்டுள்ளது. இது அரபிக் கடல் நோக்கி நகர்வதால் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications