தீபாவளியை முன்னிட்டு 14 சிறப்பு ரயில்கள் இயக்கம்!

Subscribe to Oneindia Tamil

Special trains for Diwali
சென்னை: தீபாவளியை முன்னிட்டு சென்னையிலிருந்து 14 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த ரயில்களுக்கான முன்பதிவு நாளை முதல் முதல் தொடங்குகிறது.

சிறப்பு ரயில்கள் விவரம்:

ரயில் எண் 06747: நவம்பர் 12-ந் தேதி சென்னை எழும்பூரில் இருந்து பிற்பகல் 2.35 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 5.30 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். இந்த ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், விருதாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, வாஞ்சி மணியாச்சி, திருநெல்வேலி, வள்ளியூர் ஆகிய இடங்களில் நின்று செல்லும்.

நெல்லை- சென்னை சென்ட்ரல் வாராந்திர சிறப்பு ரயில் (வழி: ஈரோடு, திருச்சி) எண் 06750: நவம்பர் 8-ந் தேதி நெல்லையில் இருந்து மாலை 4 மணிக்கு புறப்பட்டு, சென்னை சென்ட்ரலுக்கு மறுநாள் காலை 9.20 மணிக்கு வந்தடையும்.

ரயில் எண் 06749: நவம்பர் 9-ந் தேதி சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 10 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் பிற்பகல் 2 மணிக்கு நெல்லை சென்றடையும். இந்த ரயில் பெரம்பூர், அரக்கோணம், காட்பாடி, குடியாத்தம், ஆம்பூர், வாணியம்பாடி, சேலம், ஈரோடு, கரூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, வாஞ்சி மணியாச்சி ஆகிய இடங்களில் நின்று செல்லும்.

கோவை- சென்னை சென்ட்ரல் - கோவை அதிவிரைவு சிறப்பு ரயில் 06618: நவம்பர் 13-ந் தேதி கோவையில் இருந்து இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 5.15 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.

ரயில் எண் 06617: நவம்பர் 14-ந் தேதி சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 9 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 4.30 மணிக்கு கோவை சென்றடையும்.

சென்னை சென்ட்ரல் - கோவை - சென்னை சென்ட்ரல் அதிவிரைவு வாராந்திர சிறப்பு ரயில் எண் 06015 : நவம்பர் 11-ந் தேதி சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு, கோவைக்கு மறுநாள் காலை 6.40 மணிக்கு சென்றடையும்.

ரயில் எண் 06016: நவம்பர் 12-ந் தேதி கோவையில் இருந்து இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7.45 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.

சென்னை சென்ட்ரல் - நாகர்கோவில் - சென்னை சென்ட்ரல் (வழி: சென்னை எழும்பூர், விழுப்புரம், விருதாச்சலம்) சிறப்பு ரயில் எண் 06019 : நவம்பர் 10-ந் தேதி சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 7.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 11.15 மணிக்கு நாகர்கோவில் வந்தடையும்.

ரயில் எண் 06020: நவம்பர் 11-ந்தேதி நாகர்கோவிலில் இருந்து மதியம் 1.20 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 5 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.

திருச்சி- சென்னை எழும்பூர் (வழி: விழுப்புரம், மயிலாடுதுறை) சிறப்பு ரயில் 06802: நவம்பர் 12-ந் தேதி திருச்சியில் இருந்து இரவு 7.30 மணிக்கு புறப்பட்டு, சென்னை எழும்பூர் ரயில் நிலையத்துக்கு மறுநாள் காலை 4.20 மணிக்கு வந்தடையும்.

நவம்பர் 15-ந் தேதி சென்னை எழும்பூரில் இருந்து இரவு 10.45 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 6 மணிக்கு திருச்சி சென்றடையும்.

சென்னை எழும்பூர் - தூத்துக்குடி (வழி-விழுப்புரம், மயிலாடுதுறை) சிறப்பு ரயில் எண் 06001: நவம்பர் 13-ந் தேதி சென்னை எழும்பூரில் இருந்து இரவு 10.45 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் பிற்பகல் 12.50 மணிக்கு தூத்துக்குடி சென்றடையும்.

ரயில் எண் 06002: நவம்பர் 14-ந் தேதி தூத்துக்குடியில் இருந்து மாலை 6.15 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7.20 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+