சாண்டி புயலை வைத்து சர்ச்சைப் புயலைக் கிளப்பிய பிரேசில் கவர்ச்சி மாடல்!
நியூயார்க்: பிரேசில் நாட்டைச் சேர்ந்த கவர்ச்சி மாடல் அழகி நானா கோவியா, சாண்டி புயலால் சீரழிந்து போன நியூயார்க் நகரில், சேதத்திற்கு மத்தியில் நின்று போஸ் கொடுத்து அதை பேஸ்புக்கில் போட்டு புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளார்.
அமெரிக்காவே சோகத்தில் மூழ்கிக் கிடக்கும்போது இப்படியா அதை வைத்து விளம்பரம் தேடிக்கொள்வது என்று பலரும் அவரது பேஸ்புக்கில் வந்து காறித் துப்பிச் செல்கின்றனராம்.

விழுந்து கிடக்கும் மரம், சேதாரங்களுக்கு மத்தியில் நின்றபடி விதம் விதமாக போஸ் கொடுத்துள்ளார் நானா. இதுதான் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. நானாவை விமர்சிக்கும் வகையிலும், அவரைத் திட்டுவதற்காகவும் நிறையப் பேர் பேஸ்புக் கணக்குகளைத் தொடங்கி அவரை சரமாரியாக திட்டி வருகின்றனராம்.
30 வயதான நானா, பிளேபாய் பத்திரிக்கைக்காக நிர்வாண போஸ் கொடுத்து முன்பு கலக்கியவர். நிர்வாண போஸ் கொடுப்பது என்றால் அவருக்கு ஜில் ஜில் ஜிகர்தண்டா சாப்பிடுவது போல. சாண்டி புயலால் சேதமடைந்து போயுள்ள நியூயார்க் நகரின் பல்வேறு பகுதிகளுக்கு விசிட் அடித்த அவர் அங்கு காணப்பட்ட சேதங்களுக்கு மத்தியில் விதம் விதமாக போஸ் கொடுத்து புகைப்படம் எடுத்து அதை தனது பேஸ்புக்கில் போட்டுள்ளார்.
சாண்டி புயல் சோகத்தை ஏற்படுத்திச் சென்ற ஒன்று. ஆனால் அதைக் கொண்டாடும் வகையில் போஸ் கொடுத்து புகைப்படம் எடுத்துள்ளார் நானா. இது கண்டனத்துக்குரியது மட்டுமல்லாமல், மலிவான செயலுமாகும் என்று பலரும் நானாவைத் திட்டி வருகின்றனர்.
அவரைக் கேலி செய்யும் விதமாக உருவாக்கப்பட்ட பேஸ்புக் பக்கங்களில் கடலில் மூழ்கும் டைட்டானிக் கப்பல் அருகே நானா நிற்பது போலவும், உலகின் பல்வேறு அசம்பாவித சம்பவங்களைப் பார்த்து நானா ரசிப்பது போலவும் சூப்பர்இம்போஸ் செய்து படத்தைப் போட்டு வாரி வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications